பிரபல சீரியலுக்கு விரைவில் எண்ட் கார்டு போடுகிறதா சன் டிவி?

“ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் திரும்பவும் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன.”

Tamil Serial News, Sun TV Azhagu, Tamil Selvi, kalyana Parisu, Chocolate Serial to end soon
Tamil Serial News, Sun TV Azhagu Serial to end soon

Tamil Serial News: தமிழ் மக்கள் சீரியல் ரசிகர்களாக மாறியிருப்பதற்கு சன் டிவி-யை முக்கியக் காரணமாக சொல்லலாம். வித்தியாசமான கதைதளத்தில் நூற்றுக் கணக்கான சீரியல்களை இத்தொலைக்காட்சி ஒளிபரப்பியிருக்கிறது. அந்த வகையில் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து ’அழகு’ சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

கொரோனாவை விரட்டும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மோர்.. ஆவினின் புதிய தயாரிப்பு!

இதில் நடிகை ரேவதி, அழகம்மை என்ற கதாபாத்திரத்திலும், தலைவாசல் விஜய் பழனிச்சாமி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். இவர்களுடன் ஸ்ருதி ராஜ், வி.ஜே சங்கீதா, மணிகண்டன் ராஜேஷ், லோகேஷ் பாஸ்கரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இயக்குநர் ரவி ஆரம்பத்தில் இந்த சீரியலை இயக்கினார். அடுத்து ஓ.என்.ரத்னம், சுந்தரேஸ்வரன் உள்ளிட்ட இயக்குநர்களும் இந்த சீரியலை இயக்கினர். 700 எபிசோட்களைக் கடந்திருக்கும் இத்தொடரை தற்போது ராமச்சந்திரன் என்பவர் இயக்கி வருகிறார்.

 

View this post on Instagram

 

I miss everyone of my family , And thankyou everyone for making me learn things , As it was my 1st serial and my 1st step into acting , I learnt so much from each one of you . A big thanks to Appa ( Thalaivasal Vijay ) Amma ( revathi mam) @iamsruthiraj @vibhu1012 @manikanta_rajesh_official @actresssahana @perazhagi_gayathri @gayatri.jayaraman @laya.vaish murili uncle , Rajesh uncle , shreekutty , Sangeetha, akshitha bopaiah, Vicky macha Thankyou everyone for motivating me and moulding me for what im today , And I’m very sorry, if I had irritated anyone of you in set and hope we will all meet up soon Will miss you my family❣️I LOVE YOU AVINASH — THIRUNA — AVINASH journey ENDs

A post shared by Avinash Ashok (@actor_avinash_official) on

கொரோனா பிரச்னை காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், நடிகை ஊர்வசி அழகு சீரியலில் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் 60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது தமிழக அரசு. இதனால் 100 நாட்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சீரியல் படபிடிப்புகள் மீண்டும் துவங்கப்பட்டன.

நம்ம மதுரை மக்களோட மூளையே தனி… வரவேற்பைப் பெறும் ‘மாஸ்க் பரோட்டா’

ஆனால் ஜூன் 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், ஜூலை 5-ம் தேதி வரை மீண்டும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டன. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் திரும்பவும் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் அழகு சீரியல் கிளைமேக்ஸ் விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாகவும், சீரியல் முடிவுக்கு வருவதாகவும் அத்தொடரில் திருநாவாக நடித்த அவினாஷ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். இதனால் அழகு சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதாக தெரிகிறது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial news sun tv azhagu serial climax end soon

Next Story
நீயா? நானா?.. கேள்விகளால் துளைக்கும் சமுத்திரகனி!neeya naana hotstar
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com