scorecardresearch

பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் ராணியான ஷில்பா!

சூப்பர் டீலக்ஸ் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Super deluxe Box office Collection
Super deluxe Box office Collection

Super deluxe Box office Collection : ஐரா, சூப்பர் டீலக்ஸ் என இரண்டு படங்கள் கடந்த வாரம் வெளியாகி  தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்து படைத்துக் கொண்டிருக்கின்றன.  இதில் ஐராவை இயக்குநர் சர்ஜூன் இயக்கியுள்ளார். நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா சூப்பர் டீலக்ஸ் படத்தை இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். யுவனின் பின்னணி இசை படத்திற்கு உயிரோட்டமாக அமைந்துள்ளது.

இதில் சூப்பர் டீலக்ஸ் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

1st day Super deluxe Box office Collection

அதாவது ஐரா முதல் நாள் சென்னையில் 31 லட்சம் வசூல் செய்தது. ஆனால் சூப்பர் டீலக்ஸ் திரைப்படமோ, முதல் நாளில் சென்னையில் 43 லட்சமும், அமெரிக்க பாக்ஸ் ஆஃபிஸில் 69 லட்சத்து 44 ஆயிரமும், திருச்சியில் 11 லட்சமும் வசூல் செய்துள்ளது.

கடந்த வார இறுதியில் ஐரா மற்றும் சூப்பர் டீலக்ஸ் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா ?

கடந்த வார இறுதியில் 264 காட்சிகள் சென்னையில் மட்டும் திரையிடப்பட்டன. அதில் சூப்பர் டீலக்ஸ் 1.42 கோடி ரூபாய் வரை வசூலில் சாதனை செய்துள்ளது.

ஐரா நான்கு நாட்களில் 1.41 கோடி ரூபாய் வசூலிக்க, மூன்றே நாட்களில் அந்த சாதனையை சூப்பர் டீலக்ஸ் முறியடித்துள்ளது.

2019-ல் இதுவரை வெளியான படங்களில் ரஜினியின் ’பேட்ட’ திரைப்படமும், அஜித்தின் ‘விஸ்வாசமும்’ தான் அதிக வசூல் சாதனைப் படைத்துள்ளன. தற்போது இந்தப் பட்டியலில் சூப்பர் டீலக்ஸும் இணைய வேண்டும் என்பது தான் தமிழ் சினிமா ரசிகர்களின் விருப்பம்!

மேலும் படிக்க : சூப்பர் டீலக்ஸ் – திகட்டாத நெடுந்தூர பயணம்

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Super deluxe hits box office