Super Deluxe Review Live: ஆரண்ய காண்டம் படத்திற்குப் பிறகு 8 வருடம் கழித்து ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் தியாகராஜா குமாரராஜா.
இதில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் சமந்தா, ஃபகத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.
“தியாகராஜா குமாரராஜாவின் சூப்பர் டீலக்ஸ் படம் பார்த்தேன். இந்தப் படத்தில் நான் ஒரு அங்கமாக இல்லாதது, மிகுந்த வருத்தமாக உள்ளது. இதனைக் கொண்டாடுவதற்கு அத்தனை விஷயங்கள் உள்ளன” என பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் தெரிவித்துள்ளார்.
முழு விமர்சனம்:
இயக்குநர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் சூப்பர் டீலக்ஸ் இன்று வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
Web Title:Super deluxe review live
”எழுதியதை நேசித்தேன், அதனால் தான் ஷில்பாவாக நடிக்க விரும்பினேன். இது ஒரு சுய கண்டுபிடிப்பு ஒரு பயணம் போல இருந்தது. அவள் எனக்கு நிறைய விஷயங்களை கற்று கொடுத்தாள். அவள் என் தோழியாகவும் ஆசிரியராகவும் இருந்தாள். அடுத்தநாள் காலையில் எழும் போது, நான் ஒரு திருநங்கையாக இருந்தால் என்ன ?” என முன்னணி ஊடகத்திற்கு அளித்தப் பேட்டியில் விஜய் சேதுபதி தெரிவித்திருந்தார்.
”அனைத்து விமர்சனங்களை படிக்கும் போது, சூப்பர் டீலக்ஸைப் பார்க்க ஆர்வம் கூடியிருக்கிறது. குழுவினருக்கு மிகப்பெரும் வாழ்த்துகள்” என பிரியா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
சினிமா விமர்சகர் ராஜசேகர், “விஜய் சேதுபதி ஒரு நடிப்பு அசுரன் என்பதை இதிலும் நிரூபித்துள்ளார். வேம்பு கதாபாத்திரம் சமந்தாவின் திரை வாழ்க்கையில், ஒரு மிகப்பெரும் மலையாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
”சூப்பர் டீலக்ஸ் படம் இந்திய சினிமாவில் புது அனுபத்தைக் கொடுத்துருக்கிறது. விஜய் சேதுபதி வாட் எ மேன்...” என சினிமா விமர்சகர் கெளசிக் ட்வீட்டியுள்ளார்.
சூப்பர் டீலக்ஸ் படத்தில் வேம்பு என்ற கதாபாத்தில் நடித்திருக்கும் சமந்தா, “காலையிலேயே என்னை மிகுந்த மகிழ்ச்சியானவளாக மாற்றிய அனைவருக்கும் நன்றி. சூப்பர் டீலக்ஸ் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
”தியாகராஜா குமாரராஜாவின் மற்றுமொரு சிறந்த படைப்பு. திறமையான எழுத்து” என இயக்குநர் பா.ரஞ்சித் ட்விட்டரில் வாழ்த்தியுள்ளார்.