சூப்பர் சிங்கர் வின்னர் செந்தில் கணேஷ் வாழ்க்கையில் மீண்டும் ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது. அதுவும் விஸ்வாசம் படத்தின் மெகா ஜாக்பாட் இது.
Advertisment
இயக்குநர் சிவா - அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஸ்வாசம் படத்தில் பாடியிருக்கும் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்:
சமீபத்தில் வெளியான அடிச்சுத் தூக்கு என்று தொடங்கும் இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். பாடலுக்கு இசையமைத்து பாடியுள்ளார் டி.இமான். ரசிகர்களை கொண்டாட்ட மன நிலைக்கு கொண்டு செல்லும் உற்சாகத்தோடு இந்தப் பாடல் அமைந்து ரசிகர்களின் பிலே லிஸ்டில் இடம் பிடித்துள்ளது.
Advertisment
Advertisements
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் , பிரபல தனியார் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நாட்டுப்புற பாடகரான செந்தில் கணேஷ் விஸ்வாசம் படத்தில் பாடியுள்ளார். கிராமத்து கதையம்சம் உள்ள இப்படத்திற்கு இவரது குரல் ஏற்றவாறு அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சூப்பர் சிங்கர் மூலம் பல்லாயிறக் கணக்கானோர் மனதில் இடம்பிடித்த நாட்டுப்புற கலைஞர் செந்தில் கணேசும் அவரது மனைவி ராஜலட்சுமியும் இணைந்து பிரபு தேவா படத்தில் பாடியுள்ளனர். அதுவும் அவர்கள் பாடி வாழ்த்து பெற்ற சின்ன மச்சான் பாடலையே பாடியிருக்கின்றனர்.
இதையடுத்து செல்வராகவன் இயக்கும் என்.ஜி.கே படத்திலும் சூர்யாவுக்காக ஒரு பாடலை பாடியிருக்கிறார் செந்தில். தற்போது அஜித்துக்கும் பாடியிருக்கிறார் என்ற தகவல் தல ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.