ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: விரைவில் ரஜினி-கமல் படபிடிப்பு

‘தலைவர் 169' என பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்படவிருந்ததாம்.

By: Updated: July 7, 2020, 03:51:13 PM

Rajinikanth – Kamal Haasan: நடிகர்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றும் நிகழ்வை கோலிவுட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். பிரமாண்டமான நட்சத்திரங்கள் இருவரும், உச்ச நிலையை அடைந்த பிறகு இருவரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற விருப்பத்தை இரு நடிகர்களின் ரசிகர்களும் தெரிவித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கமல் தயாரித்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் இணைந்து நடிப்பதாக செய்திகள் வெளியாகின. பின்னர் அந்தப் படம் கைவிடப்பட்டதாகவும், இரண்டு நட்சத்திரங்களும் ஒன்றாக நடிக்கவில்லை என்றும் தகவல்கள் வந்தன. இந்த விஷயத்தில் சமீபத்திய அப்டேட் என்னவென்றால், படம் கைவிடப்படவில்லை என்பது தான்.

வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் : மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

நவம்பரில் இதன் படப்பிடிப்பு ஆரம்பிக்கக்கூடும் எனத் தெரிகிறது. கமல்ஹாசன் இப்படத்தை தயாரிக்கவுள்ளாராம். ஆனால், அவர் படத்தில் நடிப்பது குறித்து இன்னும் உறுதியாகவில்லை. தற்போதைக்கு ‘தலைவர் 169′ என பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்படவிருந்ததாகவும், கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தயாரிப்பாளர்கள் இந்த அறிவிப்பை ஒத்தி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

12th Result Live: இன்று பிளஸ் 2 ரிசல்ட்; மாணவர்கள் இணையதளத்தில் பார்ப்பது எப்படி?

ரஜினிகாந்த் தற்போது ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் பணியாற்றி வருகிறார். இப்படத்தில் நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Superstar rajinikanth kamal haasan movie to begins soon

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X