/tamil-ie/media/media_files/uploads/2022/06/surya-jo.jpg)
Surya-Jyothika daughter Diya got good marks in SSLC exam: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சூர்யா-ஜோதிகாவின் மகள் தியா 500க்கு 487 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான சூர்யா – ஜோதிகாவுக்கு, தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர்.
இவர்களில் தியா தற்போது 10 ஆம் வகுப்பு தேர்வில் 500க்கு 487 மதிப்பெண்கள் எடுத்து, சூர்யா-ஜோதிகாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்: உதயநிதி இப்படி செய்யலாமா? விஜய் ரசிகர்கள் கோபம்
தியா, தமிழில் 95 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களும், அறிவியலில் 98 மதிப்பெண்களும், சமூக அறிவியலில் 95 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். குறிப்பாக கணிதத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். இதனால் சூர்யா – ஜோதிகா தம்பதி மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதே போல் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் உதவி பெற்று கல்வி பயின்ற மாணவர்களும் பத்தாம் வகுப்பு தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்களாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.