scorecardresearch

உதயநிதி இப்படி செய்யலாமா? விஜய் ரசிகர்கள் கோபம்

ரெட் ஜெயண்ட் மூவிஸின் வெற்றி படங்கள் வரிசை; உதயநிதி ஸ்டாலின் மீது விஜய் ரசிகர்கள் வருத்தம்

உதயநிதி இப்படி செய்யலாமா? விஜய் ரசிகர்கள் கோபம்

Vijay fans unhappy about Udhayanidhi hit movie list: உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள வெற்றிப் பட வரிசையில் விஜயின் பீஸ்ட் திரைப்படம் இடம்பெறததால், விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ற சினிமா தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தை நடத்தி வருகிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆரம்பத்தில் படங்களை தயாரித்து வந்த நிலையில், தற்போது பெரும்பாலும் பட விநியோகம் வேலைகளை மட்டும் செய்து வருகிறது.

இதையும் படியுங்கள்: நாங்களே மறந்துட்டோம்… நீங்களும் மறந்துடுங்க… ரசிகர்களிடம் கொந்தளித்த சமந்தா

இந்த நிலையில், இந்த ஆண்டு ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்ட பெரும்பாலான படங்கள் சினிமா ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. இதனையடுத்து ரெட்ஜெயன்ட்டின் வெற்றிக்கு பின்னால் இருப்பவர்கள் என்று ஒரு பதிவை ட்விட்டரில் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த பதிவில், ரெட் ஜெயண்ட் மூவிஸில் பணியாற்றும் பணியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த புகைப்படங்களுடன், ‘இவர்கள்தான் எஃப்.ஐ.ஆர்., காத்துவாக்குல ரெண்டு காதல், டான், நெஞ்சுக்கு நீதி மற்றும் விக்ரம் படங்களின் வெற்றிக்கு பின்னால் இருந்து உழைத்தவர்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவு வெளியானதும், விஜய் நடித்த பீஸ்ட் படம் இடம் பெறாததால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் சன் பிக்சர்ஸ் தயாரித்த பீஸ்ட் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்தான் வெளியிட்டது.

பீஸ்ட் படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை என்றாலும், பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்ததாக கூறப்பட்டது. இருப்பினும் கே.ஜி.எஃப் 2 படத்தின் வருகை மற்றும் பலவீனமான திரைக்கதையால் வசூலில் சரிவைச் சந்தித்ததாக கூறப்பட்டது, அதை உண்மை என்று ஏற்றுக்கொள்ளும் வகையில், ஒருவேளை பீஸ்ட் வெற்றிப் படமாக அமையாததால் விடுபட்டிருக்கலாமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இருப்பினும் நல்ல வசூல் இருந்ததாக கூறப்படும் பீஸ்ட் படம் இடம்பெறாததில் விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vijay fans unhappy about udhayanidhi hit movie list

Best of Express