மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த ’தில் பெச்சாரா’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடலின் வீடியோ வெளிவந்துள்ளது. மறைந்த நடிகர் நடிப்பில் படமாக்கப்பட்ட கடைசி பாடல் இது தான். இந்தப் படத்தில் அவ்வரை மீண்டும் காண்பது, நிச்சயமாக சில உணர்வுகளை ரசிகர்களிடையே தூண்டும்.
அடடே…தளபதி தீனாவுக்கு சொன்ன சூப்பர் ஜோக்!
வெளியாகியுள்ள பாடலில், ஒரு கல்லூரி விழாவில் மிகுந்த நம்பிக்கையுடன் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடனமாடுவதைக் காண முடிகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் பாடி, இசையமைத்துள்ள “தில் பெச்சாரா” பாடல் வரிகளை அமிதாப் பட்டாச்சார்யா எழுதியுள்ளார். பாடலில் ரஹ்மானின் சிக்னேச்சர் டச் இன்னுமொரு பிளஸ்.
“தில் பெச்சாரா” படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் மேனி சஞ்சனா சங்கியின் கதாபாத்திரமான கிஸ்ஸியுடன் நட்பு மண்டலத்தில் சிக்கியிருப்பதை படத்தின் ட்ரைலரில் பார்த்து தெரிந்துக் கொண்டோம். தான் கற்பனை செய்ததைப் போலவே, சுஷாந்த் இந்தப் பாடலில் ஒரே ஷாட்டில் நடனமாடினார் என முந்தைய அறிக்கையில், நடன இயக்குனர் ஃபரா கான் தெரிவித்திருந்தார். அவரது இயல்பான நடனம் இந்த பாடலின் ஈர்ப்பை அதிகரிக்கிறது.
மருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்
முகேஷ் சாப்ரா இயக்கியுள்ள, ‘தில் பெச்சாரா’ படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் சஞ்சனா சங்கி நடித்துள்ளனர். ஜூலை 24 ஆம் தேதி டிஸ்னி+ மற்றும் ஹாட் ஸ்டாரில் இப்படம் வெளியாகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”