சுஷாந்த் மரணம் : சல்மான் கான், கரன் ஜோஹர் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு

சஞ்சய் லீலா பன்சாலியின் ராம் லீலா படத்தில் முதலில் நடிக்க தேர்வு செய்யப்பட்டது சுஷாந்த் சிங் ராஜ்புத் தான். ஆனால் ரன்வீர் கைக்கு அப்படம் சென்றது!

By: Updated: June 17, 2020, 05:40:45 PM

Sushanth Singh Rajput suicide case case filed against Salman Khan, Karan Johar and other 6 prominent icons of Bollywood : பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று தன்னுடைய மும்பை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தீவிர மன அழுத்தம் காரணமாக இந்த முடிவை எடுத்ததாக அவரின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நெருங்கிய வட்டாரங்கள் அறிவிக்கின்றன.

இந்நிலையில் பீகாரை சேர்ந்த சுதிர் குமார் ஓஜா என்ற வழக்கறிஞர் சுஷாந்தி சிங் ராஜ்புட்டின் மரணத்திற்கு சல்மான்கான், தயாரிப்பாளர் கரண் ஜோஹர், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி,  ஏக்தா கபூர் உள்ளிட்ட 8 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். அவர்கள் மீது
இந்திய தண்டனை சட்டப்பிரிவு 306, 109, 504, மற்றும் 506-ன் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தன்னுடைய புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க : சுஷாந்த் மரணம் : புறக்கணிக்கப்படும் திறமை! வாரிசு நடிகர்களால் திணறும் B-டவுன்!

கடந்த ஆண்டு சிச்சோரே படம் வெளியாகி வெற்றி கரமாக ஓடியது. அதன் பின்னர் தொடர்ந்து சுஷாந்த் நடிப்பதற்கு பல்வேறு வாய்ப்புகள் வந்தன. இருப்பினும் வாரிசு நட்சத்திரங்கள், பாலிவுட் அரசியல் அதிகாரம், திரைத்துறை பின்புலம் போன்ற காரணங்களால் அந்த படங்கள் தொடர்ந்து அவர் கையைவிட்டு போனது குறிப்பிடத்தக்கது என்றும் தன்னுடைய புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

சுஷாந்தின் படங்கள் அனைத்தும் ரன்வீர் கைக்கு சென்றது!

ஆதித்யா சோப்ராவின் யாஷ் ராஜ் ஃபில்ம்ஸில் ஒப்பந்தம் ஆகியிருந்தார் சுஷாந்த். அப்போது தான் சஞ்சய் லீலா பன்சாலி ராம் லீலா படத்தில் நடிப்பதற்காக சுஷாந்தினை தேர்வு செய்தார். அது தொடர்பாக யாஷ் ராஜ் ஃபில்ம்ஸில் பேசிய போது சுஷாந்த் நடிக்க இயலாது என்று கூறிவிட்டார். ஆனால் அதே நேரத்தில் அதே தயாரிப்பு நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் இருந்த ரன்வீர் சிங் இப்படத்தில் நடித்தார். படம் சூப்பர் ஹிட்டானது. அதே போன்று தான் பீஃபிக்ரே படமும். சுஷாந்த் நடிக்க மறுக்கப்பட்டு ரன்வீர் சிங்கின் கைக்கு அப்படம் போய் சேர்ந்தது.

ஷேகர் கபூர் இயக்கத்தில் பானி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தார் சுஷாந்த். ஆனால் 2 வருடங்கள் படத்தை கிடப்பிலேயே போட்டுவிட்டு இறுதியாக படத்தை சுஷாந்திற்கு பதிலாக ரன்வீரை வைத்து எடுக்க இருப்பதாக கூறிவிட்டது யஷ் ராஜ் ஃப்லிம்ஸ். இதனால் மனம் உடைந்த ஷேகரும் சுஷாந்தும் ஒரு நாள் முழுவதும் அழுதுள்ளனர். இந்த படத்திற்காக இருவரும் அவ்வளவு தூரம் உழைத்ததாக ஷேகர் கபூர் நேற்று நடைபெற்ற இண்டெர்வ்யூ ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். பானி தொடர்பாக ஆதித்யா சோப்ராவிற்கும் சுஷாந்திற்கும் மனஸ்தாபம் ஏற்பட கரன் ஜோஹர் சோப்ராவிற்கு ஆதரவாக நின்றார். பெரிய பெரிய தயாரிப்பாளர்கள் யாரும் சுஷாந்தின் நடிப்பில் படம் உருவாகவில்லை என்பதை இவர்கள் உறுதி செய்தனர் என்று பாலிவுட் வட்டாரம் அறிவிக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Sushanth singh rajput suicide case case filed against salman khan karan johar and other 6 prominent icons of bollywood

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X