உண்மையை மறைக்க விரும்பவில்லை: காதலிப்பதை ஒப்புக் கொண்ட டாப்ஸி

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கேம் ஓவர் என்ற திரில்லர் தமிழ் திரைப்படத்தில் நடித்தார் டாப்ஸி.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கேம் ஓவர் என்ற திரில்லர் தமிழ் திரைப்படத்தில் நடித்தார் டாப்ஸி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Taapsee Pannu Relationship with Mathias boe

Taapsee Pannu Relationship with mathias boe

Taapsee Pannu : இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்திருந்த 'ஆடுகளம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. படத்தில் ஆங்கிலோ இந்தியன் பெண்மணியாக சிறப்பாக நடித்திருந்தார். படமும் பெருவெற்றி பெற்று தேசிய விருது வாங்கியது.

தனது தமிழ் பாடலை பாடிக் கொண்டே வெளிநாட்டில் ஷ்ரேயா அசத்தல் நடனம்

Advertisment

அதன்பிறகு அஜித்தின் ஆரம்பம், ஜீவாவுடன் வந்தான் வென்றான் உள்ளிட்ட சில படங்களில் நடித்த டாப்ஸி, பின்னர் பாலிவுட்டில் கவனம் செலுத்த தொடங்கினார். அமிதாப்பச்சனுடன் இணைந்து அவர் நடித்த பிங்க் திரைப்படம், மாபெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த வருடம் நேர்கொண்ட பார்வை என்ற டைட்டிலில், அப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் அமிதாப்பச்சன் கதாபாத்திரத்தில் அஜித்தும், டாப்சி கதாபாத்திரத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத்தும், நடித்திருந்தார்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கேம் ஓவர் என்ற திரில்லர் தமிழ் திரைப்படத்தில் நடித்தார் டாப்ஸி. இந்நிலையில் அவர் காதலில் இருப்பதாக பாலிவுட் ஊடகங்கள் பலமுறை தெரிவித்திருக்கின்றன. இதனை ஏற்றுக்கொள்ளாத டாப்ஸி, இந்த செய்திகளுக்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே அவர் டென்மார்க்கை சேர்ந்த பேட்மின்டன் பிளேயரான, மதியாஸ் போய் என்பவரை காதலிப்பது தெரியவந்திருக்கிறது.

திருவாரூர், புதுவையில் வெளுத்து வாங்கும் கோடை மழை – மக்கள் மகிழ்ச்சி

தனது குடும்பத்தினருக்கு தன் காதலரை தெரியும் என்றும், ஒருவேளை இந்த உறவை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை எனில், இது ஒர்க் அவுட் ஆகாது எனவும் தெரிவித்திருக்கிறார். டாப்ஸி ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது, நான் யாரிடமும் எதையும் மறைக்க விரும்பவில்லை. என் வாழ்க்கையில் ஒருவர் இருப்பதை ஏற்றுக்கொள்வதில் பெருமையடைகிறேன். ஆனால் அதே நேரத்தில், அதை பற்றி மட்டுமே பேசி தலைப்பு செய்தியாக்க விரும்பவில்லை. ஏனென்றால் அது, நான் நடிகையாக இத்தனை வருடங்களில் செய்த கடின உழைப்பை மறைத்துவிடும். எனவே என்னால் அப்படி செய்ய முடியாது என்று தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து காதலருடன் டாப்சி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Taapsee Pannu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: