தனது தமிழ் பாடலை பாடிக் கொண்டே வெளிநாட்டில் ஷ்ரேயா அசத்தல் நடனம்

அவர் நடித்து மழை படத்தில் இடம்பெற்ற, ’நீ வரும்போது நான் மறைவேனா’ என்ற பாடலை தானே முணுமுணுத்துக் கொண்டு நடனமாடுகிறார்.

By: May 12, 2020, 1:18:41 PM

Shriya Saran: தமிழில், ‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அதன் பிறகு ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையானார். தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயா அங்குள்ள ஸ்டார் நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டார்.

சமூக இடைவெளியுடன் பேருந்து இருக்கைகள் – இயல்பு வாழ்விற்கு தயாராகும் ஆந்திரா!

இதற்கிடையே கடந்த 2018-ஆம் ஆண்டு, ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரூ கோஸ்சீவ் என்பவரை, காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் ஸ்ரேயா.  திருமணத்திற்கு பிறகும் அவர், தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக, உலகம் முழுவதுமே முடக்கத்தில் உள்ளது. இதன் காரணமாக, சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. ஆகையால் நடிகைகள் தங்கள் வீட்டிலிருந்தவாறே, பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே பார்சிலோனாவில், தனது கணவருடன் இருக்கும் ஸ்ரேயா,  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ஃபோட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், மழைத் தூரலில் நடுரோட்டில் டான்ஸ் ஆடுகிறார். ஒருபுறம் ஸ்ரேயாவும், மறுபுறம் அவரது கணவரும் நடனம் ஆடுகிறார்கள். மொபைலில் ஒலித்த பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா, பின்னர் அவர் நடித்து மழை படத்தில் இடம்பெற்ற, ’நீ வரும்போது நான் மறைவேனா’ என்ற பாடலை தானே முணுமுணுத்துக் கொண்டு நடனமாடுகிறார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1-ம் தேதி துவக்கம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கும் ஸ்ரேயா, இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இதற்கு நடனம் அமைத்துக் கொடுத்த பிருந்தா மாஸ்டருக்கு நன்றி என தெரிவித்து இருக்கிறார். தற்போது இந்த நடன வீடியோ வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Shriya saran rain dance in barcelona for nee varum pothu naan maraivena tamil song

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X