சமூக இடைவெளியுடன் பேருந்து இருக்கைகள் – இயல்பு வாழ்விற்கு தயாராகும் ஆந்திரா!

கொரோனா நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டால், மீண்டும் பழைய முறைப்படி இருக்கைகள் மாற்றி அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

By: Updated: May 12, 2020, 01:00:36 PM

APSRTC planning to run new seating system with social distance measures : கொரோனா வைரஸ் உலகம் எங்கும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் 50 நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது இந்தியாவின் ஊரடங்கு. மே 17ம் தேதிக்கு மேல் இயல்பு நிலைக்கு திரும்ப போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டி வருகிறது.

பேருந்துகளையும் பொது போக்குவரத்தினையும் மட்டுமே நம்பி இருக்கும் மக்களின் வாழ்வாதாரம் பெரும் அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. இனி வருங்காலங்களில் பேருந்தில் பயணிக்கும் போதும் கூட சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் ஆந்திர அரசு இருக்கை அமைப்பை மாற்றி அமைத்துள்ளது.

மேலும் படிக்க : கொரோனாவுக்கு எதிரான போர் : 90 நாடுகளுக்கு உதவிக் கரம் நீட்டும் இந்தியா

அம்மாநில போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயங்கும் பேருந்துகளில் மூன்று வரிசைகளில் ஒரு பயணிக்கும் மற்றொரு பயணிக்கும் இடையே குறைந்தது சில அடிகள் தூரம் இருக்கும் வகையில் இருக்கைகள் மாற்றப்பட்டுள்ளது.

மேலும் மே 18ம் தேதியில் இருந்து பொதுபோக்குவரத்து ஆரம்பமாக இருக்கும் நிலையில், இருக்கை வசதிகள் மாற்றம் செய்யப்படாத பேருந்துகளில் 50% இடங்களை மட்டுமே பூர்த்தி செய்து பேருந்துகளை இயக்கவும் திட்டமிட்டுள்ளது அவ்வரசு. பேருந்துகளில் நின்று கொண்டு பயணிப்பதற்கு அனுமதி கிடையாது.

50% பயணிகள் மட்டுமே என்றால் பேருந்து கட்டணங்கள் உயர்வதற்கு அதிக அளவு வாய்ப்புகள் உள்ளது என்ற நிலையில் ஆந்திர மாநில போக்குவரத்து துறை அமைச்சர் பெர்னி நானி தற்போது பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணமெல்லாம் இல்லை என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“ 

கொரோனா நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டால், மீண்டும் பழைய முறைப்படி இருக்கைகள் மாற்றி அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Apsrtc planning to run new seating system with social distance measures

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X