ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நடிகர் கைது

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஹோட்டலில் காத்திருந்தபோது, படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த மேலாளர், அவரை திரும்பிச் செல்லும்படி சொல்லியிருக்கிறார்.

By: August 27, 2020, 9:37:19 AM

ஒரு வலைத் தொடரிலும் சில குறும்படங்களிலும் நடித்துள்ள ஒரு நடிகர் புதன்கிழமை தேனம்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

அசத்தலான 5 ஆன்லைன் கேம்ஸ்… நட்பூஸ், என்ஜாய்!

ஒரு வலைத் தொடரின் படப்பிடிப்பு அந்த ஹோட்டலில் நடந்துக்  கொண்டிருந்தது. வலைத் தொடரை உருவாக்கும் நிறுவனத்தின் மேலாளர் மகேஷ், கென்னடி ஜான் கங்காதரனை அந்த ஹோட்டலில் சந்திக்கும்படி கேட்டுக் கொண்டார்.

புழலில் வசிக்கும் கென்னடி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஹோட்டலில் காத்திருந்தபோது, படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த மேலாளர், அவரை திரும்பிச் செல்லும்படி சொல்லியிருக்கிறார். இதனால்  விரக்தியடைந்த கென்னடி காலை 10.30 மணிக்கு அங்கு வெடிகுண்டு இருப்பதாக ஹோட்டலுக்கு ஃபோன் செய்திருக்கிறார். அதோடு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் அழைத்து, ஹோட்டலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் அது சில நிமிடங்களில் வெடிக்கும் என்றும் தெரிவித்தார். எச்சரிக்கையின் அடிப்படையில், மோப்ப நாய் ரீட்டாவுடன் வெடிகுண்டு அகற்றும் குழு சம்பவ இடத்திற்கு வந்தது. ஒரு மணி நேர தேடலில் அந்த அழைப்பு வெறும் புரளி எனத் தெரியவந்தது.

Immunity Tips: எதைச் சாப்பிடணும்? எதைச் சாப்பிடக் கூடாது?

இதையடுத்து தேனம்பேட்டே போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஃபோன் செய்தவரை கென்னடி என்று அடையாளம் கண்டனர். படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால் விரக்தியடைந்த கென்னடி தான் அவ்வாறு அழைப்பு விடுத்ததாக ஒப்புக்கொண்டார். தற்போது அவர் விசாரிக்கப்படுகிறார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Tamil actor arrested for making hoax bomb call

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X