பாழடைந்த வீடு... தனிமையில் நடிகை கனகா: என்ன பிரச்னை? மீட்க வழி இருக்கிறதா?
தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து பிஸியாக நடிகையாக வலம் வந்த கனகாவுக்கு ஒரு கட்டத்தில் அவரது தாயின் மரணம் பெரும் வேதனையை கொடுத்துள்ளது.
தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து பிஸியாக நடிகையாக வலம் வந்த கனகாவுக்கு ஒரு கட்டத்தில் அவரது தாயின் மரணம் பெரும் வேதனையை கொடுத்துள்ளது.
கரகாட்டக்காரன் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கனகா அதன்பிறகு ரஜினி விஜயகாந்த் என முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் தற்போது அவர் ஒரு பாழடைந்த வீட்டில் குடியிருந்து வருவதாகவும், யாரையும் சந்திப்பதில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Advertisment
தமிழ் சினிமாவில், 1989-ம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியான படம் கரகாட்டக்காரன். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கனகா. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த தேவிகாவின் மகளான இவர், கார்த்திக், ரஜினிகாந்த், விஜயகாந்த், உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து பிஸியாக நடிகையாக வலம் வந்த கனகாவுக்கு ஒரு கட்டத்தில் அவரது தாயின் மரணம் பெரும் வேதனையை கொடுத்துள்ளது. அதன்பிறகு ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக சினிமாவில் இருந்து விலகி தற்போது தனியாக வசித்து வருகிறார்.
Advertisment
Advertisements
இது குறித்து அகீரா பிளஸ் என்ற யூடியூப் சேனலில் பத்திரிக்கையாளர் அளித்த பேட்டி ஒன்றில்,
3 தலைமுறைகளாக பாதிக்கப்பட்ட சிரமங்களுக்கு உள்ளான குடும்பம் தான் கனகாவின் குடும்பம். கனகாவின் அம்மா தேவிகா அவரின் தாத்தா ரகுபதி வெங்கையா மிகபெரிய கோடீஸ்வரராக திரைப்பட தயாரிப்பாளராக, பல விஷயங்களில் தனது முத்திரையை பதித்திருந்தார். அதேபோல் சமூகசீர்திருத்தவாதியாகவும் இருந்திருக்கிறார். இவர் காலக்கட்டத்தில் கனகாவின் குடும்பம் சிறப்பாக வாழ்ந்துகொண்டிருந்தனர்.
ரகுபதி வெங்கையாவின் மகன் சூரியபிரகாஷ் தனது அப்பா சம்பாதித்து வைத்த பணத்தை பட தயாரிப்பில் இழந்துவிட்டார். அவர்தான் தேவிகாவின் அப்பா, அப்போது ஏற்பட்ட வறுமையின் காரணமாகத்தான் தேவிகா நடிக்க வந்துள்ளார். தான் நன்றாக வாழ்ந்த சிறு வயதில், தேவிகா நடனம் கற்றுக்கொண்டது அவருக்கு திரைப்படத்தில் பெரும் உதவியாக இருந்தது.
தேவிகா நடிகையாக இருக்கும் போது உதவி இயக்குனராக இருந்த தேவதாஸ் என்பரை திருமணம் செய்துகொண்ட தேவிகாவுக்கு கனகா பிறக்கிறார். அப்போது கனகாவுக்கு 3 வயது இருக்கும்போது தேவிகா தனது கணவரை பிரிந்துவிடுகிறார். அதன்பிறகு அம்மாவுடனே வாழ்ந்து வந்த கனகாவுக்கு அம்மாவின் இழப்பு பேரிழப்பாக அமைந்தது. இதனால் உடல்நிலை பாதிப்பு மன சங்கடம் இதனால் பாதிக்கப்பட்டார்.
இந்த பாதிப்பு காரணமாக கனகா வீட்டுக்குள்ளே முடங்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் அவர் இறந்துவிட்டார் என்ற செய்திகள் வெளியானபோது பத்திரிக்கையளர்களுடன் அவரது வீட்டிற்கு சென்றோம். அப்போது அந்த வீடு மிகவும் பாழடைந்து கேட் துருபிடித்து இருந்தது. போய் கதைகளில் இருக்கும் ஒரு பங்களாக போன்று அந்த வீடு காட்சி அளித்தது. அதேபோல் அந்த வீட்டில் இருந்த 2 கார்களும் அதே நிலையில் தான் இருந்தது.
முதலில் வெளியில் நின்று அழைத்தபோது அவர் வரவில்லை. அதன்பிறகு சிறிது நேரம் கழித்து வந்து பேசினார். அதேபோல் அவர் வீட்டில் புகையாக வருகிறது என்று பக்கத்துவீட்டுக்காரர்ககள் ஃபையர் சர்வீஸ்க்கு போன் செய்தபோது பத்திரிக்கையாளரும் சென்றிருந்தோம் அப்போது வீட்டில் அடுப்பு எரித்தேன் அவ்வளவுதான் என்று கேஷ்யூவலாக சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
ஒருமுறை எனது அப்பாவே என்னை கொல்ல நினைக்கிறார் நான் பத்திரிக்கையாளர்களை அழைத்து ஞாயம் கேட்க போகிறேன் என்று சொல்லி அழைத்தார். அப்போது என்னை நடிக்க வேண்டாம் என்று சொன்னீர்களே என் அம்மா ஒரு நடிகைதானே அவரை எப்படி திருமணம் செய்துகொண்டீர்கள் என்று கேட்டார். அதற்கு மாடிமேல் இருந்த அவரது அப்பா மேல வா என்று சொன்னார். ஆனால் கனகா போகாமல் கீழிருந்தே பதில் கேட்டார்.
அதற்கு அவரது அப்பா உங்க அம்மாதான் என்னை லவ் பண்ணார் நான் பண்ணவில்லை. என்னிட்ம் கெஞ்சி கேட்டுக்கொண்டதால் அவரை திருமணம் செய்துகொண்டேன். ஆனால் உனக்கு 3 வயதாக இருக்கும்போது தூக்கிக்கொண்டு சென்றுவிட்டார். அதன்பிறகு என்னை கொலை செய்ய பார்த்தார் என்று சொன்னார். இதனால் தான் கனகா மிகுந்த மனவேதனைக்கு தள்ளப்பட்டார். ஒரு முறை சொத்து தொடர்பான வழக்கில் கோர்ட்டில் அவரை யாரென்றே தெரியாது என்று கனகா சொல்லிவிட்டார்.
இப்போது கனகா தனது வீட்டில் தான் மட்டுமே இருக்கிறார். வீட்டிற்கு வாட்மேன், வேலைக்காரர்கள் என்று யாருமே இல்லை. அந்த வீட்டில் இருந்து வெளி தொடர்பு என்றால் பால்பாக்கெட் போடும்போது அதை வந்து எடுத்துபோகிறார் அவ்வளவு தான். சென்னை மையத்தில் இருக்கிறார். ஆனாலும் என்ன சாப்பிடுகிறார். வெறும் பால் மட்டும் தான் அவரது உணவா என்று எதுவும் தெரியவில்லை. அவரின் அம்மா இறந்ததில் இருந்தே அவரின் நிலை சரியில்லை என தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“