பிக்பாஸ் சீசன் 6 விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சிக்காக முன்னோட்ட ப்ரமோதற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
Advertisment
ரசிகர்களின் ரசனைக்கேற்ப ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்புவதில் முன்னணியில் உள்ள விஜய் டிவியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 6-வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது.
எவ்வித தொடர்பும் இல்லாமல் சக போட்டியாளர்களுடன் ஒரே வீட்டில் இருந்து 100 நாட்களை கழிக்க வேண்டும். இடையில் பிக்பாஸ் சொல்லும் டாஸ்க்குகளையும், ரசிகர்கள் வழக்கும் மதிப்பெண்களையும் வைத்து போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவர்கள் இதுவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதி.
பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாத இந்த நிகழ்ச்சியில் முதல் 3 சீசன்கள் பெரும்பாலும் திரைத்துறை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்ற நிலையில், 4 மற்றும் 5-வது சீசனில் பிரபலமில்லாத பலர் போட்டியாளர்களாக பங்கேற்றனர். இதனிடையே 6-வது சீசனில் அறிமுகமில்லாத சாதாரண போட்டியாளர்களும் கலந்துகொளள்லாம் என கடந்த வாரம் விஜய் டிவி அறிவித்திருந்தது.
இது தொடர்பாக ப்ரமோ வைரலாக பரவிய நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனுக்காக ப்ரமோ வெளியிடப்பட்டள்ளது. இந்த ப்ரமோவில் ஒரு பெரிய கதவு திறக்கப்படுகிறது. அப்போது அங்கிருந்து தோன்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசன், வானத்தை பார்த்துவிட்டு, வாட்சையும் பார்த்து வேட்டைக்கு ரெடியா என்று கேட்கிறார்.
அத்துடன் ப்ரமோ முடிவடைந்த நிலையில், 25 வினாடிகள் கொண்ட இந்த ப்ரமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கமல்சார் அறிவான பேச்சை கேட்கவே பிக்பாஸ் பார்க்கலாம் என்று கூறியுள்ளார்..
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil