scorecardresearch

நடிகர் சரத்பாபுவின் திருமண வாழ்க்கை; 2 மனைவிகள் என்பது உண்மையா?

நானும், ரமா பிரபாவும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை; திருமண வாழ்க்கைக் குறித்து மறைந்த நடிகர் சரத்பாபு கூறிய தகவல்கள்

sarath babu
நடிகர் சரத்பாபு

நம்பியார் மகளை மட்டுமே திருமணம் செய்துக் கொண்டேன் என மறைந்த நடிகர் சரத்பாபு, தனது திருமண வாழ்க்கை குறித்து பேசிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்த சரத்பாபு இன்று மரணமடைந்தார். 71 வயதான சரத்பாபு செப்சிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் இன்று மதியம் சரத்பாபு காலமானார். அவரின் மறைவுக்கு திரை பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: அந்தக் கால சாக்லேட் பாய்: தமிழ் சினிமாவின் ஜமீன்தார்: மறைந்தார் சரத் பாபு

1970களில் தெலுங்கு படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு. பின்னர் தமிழில் நிழல் நிஜமாகிறது என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தமிழ், தெலுங்கு மட்டுமின்றி கன்னடம், மலையாளம், ஹிந்தி படங்களிலும் சரத்பாபு நடித்துள்ளார். இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள சரத்பாபு, முன்னணி நடிகர்கள், முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றி உள்ளார். மேலும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் சரத்பாபு நடித்துள்ளார். ரஜினி – சரத்பாபு காம்பினேஷனில் வந்த முள்ளும் மலரும், முத்து, அண்ணாமலை உள்ளிட்ட படங்கள் பெரிய வரவேற்பைப் பெற்றன.

நடிகர் சரத் பாபு, தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்த பிரபல நடிகையான ரமா பிரபாவை 1971-ல் திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், இந்த ஜோடி 1988-ல் விவாகரத்து செய்தது. பின்னர் நடிகர் எம்.என் நம்பியாரின் மகள் சினேகலதா தீட்சித் என்பவரை 1990 ஆம் ஆண்டில் சரத்பாபு திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணமும் 2011-ல் விவாகரத்தில் முடிந்தது.

இதனிடையே தனது திருமணம் குறித்து முன்பு பேசியிருந்த சரத்பாபு, “தான் முதலில் திருமணம் செய்துகொண்டது சினேகலதாவை தான்” என்று கூறியிருந்தார். மேலும், “தமிழ் நடிகர் எம்.என். நம்பியாரின் மகளான சினேகலதா என்பவரை பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தேன். ஆனால் ரமா பிரபா என்பவரை நான் திருமணம் செய்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நாங்கள் இணைந்து வாழ்ந்தோம், இருவரும் பிஸியாக படங்களில் நடித்து வந்ததால், நாங்கள் இணைந்து இருந்தது சில நாட்கள் மட்டுமே, நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவே இல்லை” என்றும் சரத்பாபு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actor sarath babu talk about his wives