Advertisment

அஜித்தின் புதிய தோற்றம்.. மாலத்தீவில் டான்ஸ் ஆடிய விஜய் பட ஹீரோயின்.. மேலும் செய்திகள்

கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

author-image
WebDesk
New Update
அஜித்தின் புதிய தோற்றம்.. மாலத்தீவில் டான்ஸ் ஆடிய விஜய் பட ஹீரோயின்.. மேலும் செய்திகள்

வலிமை திரைப்படத்தை தொடர்ந்து 3 வது முறையாக இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிக்கிறார் அஜித். இது அஜித் நடிக்கும் 61 வது திரைப்படம். இந்த திரைப்படத்தை போனிகபூர் தயாரிக்கிறார். 

Advertisment

இந்தியில் வெளியான பிங்க் படத்தை தமிழில் நேர்கொண்ட பார்வை என வினோத் ரீமேக் செய்தார். அந்தப் படத்தில் அஜித் குமார், வித்யா பாலன் நடித்திருந்தனர்.

இந்நிலையில், அதன் பிறகு மீண்டும் அதே கூட்டணியில் வலிமை படம் தயாராகி வருகிறது.

இந்த இரண்டு படங்களையுமே பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தயாரித்து வருகிறார்.

வலிமை படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில், மூன்றாவதாக இதே அணி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது.

இந்த திரைப்படம் அதிரடி திகில் கதையம்சத்தில் தயாராக இருப்பதாகவும், இதில் அஜித் குமார் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஒரு வேடம் வில்லத்தனமான கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது. 

சமீபத்தில் காதில் கடுக்கன், பெரிய கண்ணாடி, நீளமான தாடி, கோட் சூட் என வித்தியாசமான லுக்கில் அஜித் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. அந்த கெட்டப்பில் தான் அஜித் அடுத்த படத்தில் தோன்ற உள்ளார் என தகவல் பரவியது.

இந்த நிலையில் அடுத்த படத்திற்கான அஜித்தின் லுக்கின் நெகட்டிவ் புகைப்படம் ஒன்றை தயாரிப்பாளர் போனி கபூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் சூர்யா படத்தின் டீஸர் வெளியாகும் தேதி அறிவிப்பு

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'.

கொரோனா பாதிப்பினால் தள்ளிப்போன எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தற்போது வருகிற மார்ச் மாதம் 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 இந்த திரைப்படத்தின் தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி டப்பிங் பதிப்புகளும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளன.

இந்த நிலையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதியை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

நாளை மறுநாள் (பிப்ரவரி 18) மாலை 6 மணிக்கு எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார். ஆர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பாண்டிராஜ் இயக்கிய பசங்க-2 படத்தை சூர்யா தயாரித்திருந்தார். அதில் கெளரவ வேடத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் சகோதரர் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் வெற்றி படத்தையும் பாண்டிராஜ் இயக்கியிருந்தார்.

சாலை விபத்து: பஞ்சாபி நடிகர் தீப் சித்து பலி

பஞ்சாபி நடிகர் தீப் சித்து சாலை விபத்தில் உயிரிழந்தார்.

டில்லி கண்ட்லி-மானேசர்-பல்வால் எக்பிரஸ் சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்று லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.

படுகாயமடைந்த சித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

விவசாயிகள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து கடந்த ஆண்டு குடியரசு தின வன்முறையில்  குற்றம்சாட்டப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர் சித்து.

இவரது மறைவுக்கு பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சன்னி இரங்கல் தெரிவித்தார்.

38 வயதாகும் தீப் சித்து ஜோரா 10 நம்பாரியா, ஜோரா: த செகண்ட் சாப்டர், ராங் பஞ்சாப் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவரது மறைவுக்கு பஞ்சாப் திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர்.

வார்த்தையால் குத்திக் கிழிக்கும் கோபி… இவ்ளோ ஏமாளியா இருக்காரே பாக்யா?

ஷூட்டிங் முடிந்த விஜய் சேதுபதியின் அடுத்த படம்

விஜய் சேதுபதியின் அடுத்த படத்திற்கு VJS 46 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. டைரக்டர் பொன்ராம் இயக்கி உள்ள இந்த படம் சன் பிக்சர்ஸ் பேனரில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷுட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது.

கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் ரோலில் நடித்துள்ளார். சேதுபதி படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இந்த படத்தில் ஹீரோயினாக மிஸ் இந்தியா பட்டம் வென்ற அனுகீர்த்தி வாஸ் நடித்துள்ளார்.

பிக்பாஸ் புகழ் நடிகை ஷிவானியும் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

மாலத்தீவில் டான்ஸ் ஆடிய விஜய் பட ஹீரோயின்

நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தை டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் இயக்கியுள்ளார். படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து என்ற பாடல் யூ-டியூப் தளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

பாடல் வெளியான ஒரே நாளில் 2 கோடி முறைக்கு மேல் பார்க்கப்பட்டு டிரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தில் முகமூடி படத்தில் நடிகர் ஜீவாவுடன் இணைந்து நடித்து பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

அந்தப் பாடலில் நடிகர் விஜய்க்கு நிகராக சிறப்பாக நடினம் ஆடியுள்ளார் பூஜா.

மாலத்தீவு சென்றுள்ள பூஜா ஹெக்டே, அரபிக் குத்து பாடலை ஒலிக்கவிட்டு நடுக்கடலில் படகில் செல்லும்போது நடனம் ஆடியிருக்கிறார்.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஒரு பக்கம் யூ-டியூப் தளத்தில் இந்தப் பாடல் ஹிட்டாகி வருகிறது. மற்றொரு பக்கம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவரது நடனம் டிரெண்டாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Entertainment News Tamil Kollywood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment