New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/04/Trisha-Tik-Tok-Dance-Video.jpg)
Trisha Tik Tok Dance Video
ஆங்கில பாடலின் வரிகளுக்கு ஏற்றவாறு டிக் டாக்கில் நடனமாடுகிறார் த்ரிஷா...
Trisha Tik Tok Dance Video
Trisha Tik Tok Dance Video: கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவில் உள்ளது. இதில் ஏற்கனவே ஒரு வாரம் முடிந்து விட்டது. இந்த தனிமை மனதையும், உடலையும் சற்று சோர்வாக்கக்கூடும் என்பதால், தங்களை எனெர்ஜியாக வைத்துக் கொள்ள பல விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள் மக்கள். இதற்கு பிரபலங்களும் விதிவிலக்கல்ல.
இது ‘கொரோனா பிரீமியர் லீக்’ – பிரதமர் மோடி கட்டமைத்த அணியில் 40 ‘மெகா’ வீரர்கள்!
இந்நிலையில் தற்போது த்ரிஷாவின் நடனம் ஒன்று வைரலாகி வருகிறது. என்றும் இளமைக்கு பெயர் போன த்ரிஷா, கறுப்பு ஷார்ட்ஸ் மற்றும் ஊதா நிற மேலாடை அணிந்திருக்கிறார். (ஃபேஷன் ஃப்ரீக்குகள் கட்டாயம் கவனிக்க) அதோடு ஸ்டைலான கூலர்ஸும், காதில் மஞ்சள்-வெள்ளை பூவையும் வைத்திருக்கிறார். ஆங்கில பாடலின் வரிகளுக்கு ஏற்றவாறு டிக் டாக்கில் நடனமாடுகிறார்.
View this post on Instagram
Trisha on TikTok ???????????? #trishakrishnan #trishaafp
A post shared by Trisha Krishnan ???? (@trishaa.fp) on
இந்த லாக் டவுன் நேரத்தில் பிரபலங்கள் பலரும் சமையல் கற்றுக் கொள்வது, பெயிண்டிங் செய்வது, பழைய நினைவுகளை அசைபோடுவது என தங்களை பிஸியாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் நடிகை த்ரிஷா டிக் டாக்கில் நடனமாடி, தன்னை உற்சாகமாக வைத்துக் கொண்டிருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.