கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்துவதை தவிர்க்கும் விதமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்களிடம் நேர்மறையான எண்ணங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
Prime Minister Narendra Modi held meeting with 40 top sportspersons, including Sachin Tendulkar, PV Sindhu and Hima Das, via video conferencing today, on #COVID19 situation in the country. pic.twitter.com/eC4xKceL4a
— ANI (@ANI) April 3, 2020
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கை தொடர்பாக மாநில முதல்வர்கள், அரசு அதிகாரிகள், மருத்துவ துறையினர் என பல தரப்பினருடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் வசதி மூலம் உரையாடி வருகிறார்.
‘டக்வொர்த் லூயிஸ்’ முறையை உருவாக்கிய டோனி லூயிஸ் மரணம் – பாகிஸ்தான் கையெடுத்து கும்பிடனும்!!
காட்சி ஊடக பிரதிநிதிகள், பத்திரிகை ஆசிரியர்கள், ரேடியோ ஜாக்கிகள், நாட்டின் முன்னணி சமூக மற்றும் மத அமைப்பினர், உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடனும் பிரதமர் மோடி உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து நாட்டின் முன்னணி விளையாட்டு வீரர்களுடன் அவர் இன்று உரையாற்றினார். நாட்டின் முன்னணி விளையாட்டு வீரர்கள் 40 பேர் பிரதமர் மோடி, காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில், சச்சின் டெண்டுல்கர், கங்குலி, விராட் கோலி பி.வி. சிந்து, ஹிமா தாஸ் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.
56 இந்திய உயிர்களைக் பலிகொண்ட கோவிட் -19 ஐ சமாளிக்க பிரதமர் ‘சங்கல்ப், சன்யம், சாகரத்மக்தா, சம்மன் மற்றும் சஹியோக்’ என்ற ஐந்து அம்ச மந்திரத்தை வழங்கினார்.
56 இந்திய உயிர்களைக் கொன்ற கோவிட் -19 ஐ சமாளிக்க பிரதமர் ‘சங்கல்ப், சன்யம், சாகரத்மக்தா, சம்மன் மற்றும் சஹியோக்’ என்ற ஐந்து அம்ச மந்திரத்தை வழங்கினார்.
சமையல் கலைஞராக மயங்க்: கொரோனா உபயத்தால் வெளியே வரும் கிரிக்கெட் வீரர்களின் அசாத்திய திறமைகள்
பி.டி.உஷா, புல்லேலா கோபிசந்த், விஸ்வநாதன் ஆனந்த், மேரி கோம், பஜ்ரங் புனியா, ரோஹித் சர்மா, வீரேந்தர் சேவாக், யுவராஜ் சிங், மற்றும் புஜாரா ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மற்ற முக்கிய விளையாட்டு வீரர்கள் ஆவர்.
உடல் மற்றும் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதற்கும், ஆயுஷ் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களை பிரபலப்படுத்தவும் மோடி அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
மேலும், கொரோனா வைரஸ் பரவுதை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்களிடம் நேர்மறையான எண்ணங்களை கொண்டு சென்று சேர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது எனவும், இதில் விளையாட்டு வீரர்கள் முக்கிய பங்காற்ற முடியும் எனவும் அவர் கூறினார். இதன் மூலம் கொரோனா வைரஸை விரட்டுவதில் மக்களுக்கு தார்மீக ரீதியாக விளையாட்டு வீரர்கள் பங்களிப்பை செய்ய முடியும் என பிரதமர் மோடி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil