நடிகையும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான ரம்யா சுப்பிரமணியன் தீவிர உடற்பயிற்சி ஆர்வலர். பளு தூக்கும் போட்டிகளில் கலந்துக் கொண்டவர். அதோடு மற்ரவர்களுக்கும் ஃபிட்னெஸ் டிப்ஸை கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் தனது ஃபேட் பர்னிங் பயணத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துக் கொண்டார். 'ஆடை' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த திவ்யா, உடற்பயிற்சிகளால் தன்னைத் தானே மெருகேற்றிக் கொண்டுள்ளார். இது உடலை குறைக்க விரும்பும் பலருக்கும் தூண்டுதலாக இருக்கும் என்பதில் ஐய்யமில்லை.
தனது எடை இழப்பு பயணத்தின் மிகவும் சிக்கலான கட்டத்தை விளக்கும் வகையில் தொடர் படங்களை பதிவேற்றியிருந்தார் ரம்யா. அவரது மாற்றம் குறித்த ஒரு சிறிய குறிப்பில், 'கடினமான விஷயங்கள் தான் நல்ல விஷயங்கள்!’ என்று எழுதியிருந்தார். அந்தப் படங்களில் உள்ள ரம்யாவின் தோற்றத்தில் நல்ல மாறுதல்கள் தெரிந்தது. மேலும் இந்த பயணத்தில் அவருக்கு ஆதரவளித்தத தனது நண்பர்களையும் பாராட்டினார்.