'மாயா' படத்தின் சாய்பாபா; அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்த இவர் யார்னு தெரியுமா? இப்போ என்ன செய்கிறார்?

சாய் பாபாவை மையமாக வைத்து வெளியான படம் தான் மாயா. ராமநாராயாணன் இயக்கிய இந்த படத்தில் நெப்போலியன், நக்மா, ராமி ரெட்டி, வடிவுக்காரசி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

சாய் பாபாவை மையமாக வைத்து வெளியான படம் தான் மாயா. ராமநாராயாணன் இயக்கிய இந்த படத்தில் நெப்போலியன், நக்மா, ராமி ரெட்டி, வடிவுக்காரசி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

author-image
WebDesk
New Update
Maaya Sheela Kaur

தமிழ் சினிமாவில் 90-களில் பக்தி படங்கள் அதிகம் வெளியான காலக்கட்டம் என்று சொல்லலாம். அம்மன் பக்தி படங்கள் வரிசையாக வந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில், சாய் பாபாவை மையமாக வைத்து வெளியான படம் தான் மாயா. ராமநாராயாணன் இயக்கிய இந்த படத்தில் நெப்போலியன், நக்மா, ராமி ரெட்டி, வடிவுக்காரசி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சாய் பாபாவின் தீவிர பக்தராக எஸ்.பி.பாலசுப்பிரமணியன் நடித்திருந்த நிலையில், ஜெயசூர்யா என்ற கேரக்டரில் ஷீலா கவுர் என்பவர் நடித்திருந்தார்.

Advertisment

1999-ம் ஆண்டு வெளியான இந்த படம் கூடு விட்டு கூடு பாயும் வித்தையை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. தனது மகன் மனைவியுடன் சந்தோஷமாக இருக்கும் நெப்போலியன், வெளியூர் செல்லும்போது, ஒரு மந்திரவாதியிடம் மாட்டிக்கொள்வார். அந்த மந்திரவாதி தான் இளமையுடன் இருக்க வேண்டும் என்றால் நெப்போலியன் மகனை கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தத்தில், நெப்போலியன் உடலுக்குள் கூடுவிட்டு கூடு பாய்ந்துவிடுவார்.

அதேபோல் நெப்போலியன் வீட்டுக்குள் நக்மாவின் உறவினர்களாக இருக்கும் ராமி ரெட்டி வடிவுகரசி இருவரும் தங்களுக்கு அதிக சக்தி வேண்டும் என்பதற்காக நெப்போலியன் மகன் ஜெய்சூர்யாவை கொல்ல திட்டமிடுவார்கள். ஒரு கட்டத்தில் இவர்கள் மூவரும் இணைந்து திட்டம் தீட்ட, இந்த திட்டத்தில் இருந்து ஜெய்சூர்யாவை காப்பாற்ற, அந்த பாபாவே ஜெய்சூர்யா ரூபத்தில் இந்த வீட்டுக்கு வந்து குழப்பத்தை ஏற்படுத்துவார். அதன்பிறகு என்ன நடந்தது என்பது தான் இந்த படத்தின் கதை.

Arun vijay Sheela Kaur

Advertisment
Advertisements

விறுவிறுப்புக்கு பஞசம் இல்லாமல், இருக்கும் இந்த படத்தில் ஜெய்சூர்யா என்ற மகன் கேரக்டரில் நடிகை ஷீலா கவுர் நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்திருப்பார். 1994-ம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான ராஜகுமாரன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷீலா கவுர், அர்ஜூனுடன் ஆயுத பூஜை, விஜயுடன் பூவே உனக்காக உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மாயா படத்தில் 2 வேடங்களில் நடித்த இவர், நந்தா படத்தில் சூர்யாவின் தங்கையாக நடித்திருப்பார்.

அதேபோல் உன்னை நினைத்து படத்தில் சினேகாவின் தங்கையாக நடித்திருந்த இவர், வீராசாமி படத்தில் டி.ராஜேந்தருடன் நடித்திருப்பார். பெரும்பாலும் தங்கை கேரக்டரில் நடித்து வந்த இவர், சீனா தானா படத்தில் பிரசன்னாவுக்கும், வேதா படத்தில் அருண் விஜய்க்கும் ஜோடியாக நடித்துள்ளார். இவரது நடிப்பில் தமிழில் கடைசியாக வந்த படம் வேதா தான். அதேபோல் கடைசியாக கன்னட படமாக ஹைபர் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் 2018-ல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் அல்லு அர்ஜூன், ஜூனியர் என்.டி.ஆருடன் ஷீலா இணைந்து நடித்துள்ளார். 

ஷீலா கவுர் கடந்த 2020-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சந்தோஷ் ரெட்டி என்பவரை திருமணம் செய்துகொண்டதாக அப்போது புகைப்படங்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷீலா கவுர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். 

Tamil Cinema News tamil cinema actress

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: