Advertisment

'விதி தன் வேலையை சரியா செய்திருக்கு': வடிவேலுவை சீண்டிய முத்துக்காளை

4 ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு சமீபத்தில் வெளியாக நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்

author-image
WebDesk
New Update
'விதி தன் வேலையை சரியா செய்திருக்கு': வடிவேலுவை சீண்டிய முத்துக்காளை

வடிவேலு நடித்த நாய் சேகர் படம் தோல்வி குறித்து பேசிய நடிகர் முத்துக்காளை விதி தன் வேலையை சரியாக செய்துள்ளது என்று பேசியது வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் வடிவேலு. சில படங்களில் நாயகனாக நடித்துள்ள இவர், இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் 2-ம் பாகத்தில் இயக்குனர் சிம்பு தேவன் மற்றும் தயாரிப்பாளர் ஷங்கருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவுக்கு தடை விதித்தது.

அதன்பின்னர் 4 ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு சமீபத்தில் வெளியாக நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார், லைகா நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்தை சுராஜ் இயக்கியிருந்தார். ஆனந்தராஜ், ஷிவானி, ரெட்டின் கிங்ஸ்லே உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது.

வடிவேலு ரீ-என்டரி மூவி என்ற பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்களை கவர தவறிவிட்டது. மேலும் படத்தில் காமெடி சரியாக வொர்க்அவுட் ஆகவில்லை என்று சில விமர்சனங்களும் எழுந்தது. இதனிடையே நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் தோல்வியின் காரணமாக வடிவேலு இனி மற்ற நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடிக்க முடிவு செய்துவிட்டதாக தகவல் வெளியானது.

இதனிடையே திருவாரூரில் சாமி தரிசனத்திற்காக சென்ற பிரபல காமெடி நடிகர் முத்துக்காளை செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் நாய் சேகர் படத்தின் தோல்வி குறித்து கேட்டகப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், விதி தனது வேலையை சரியாக செய்துள்ளது என்றுதான் நான் சொல்வேன் என்று கூறியுள்ளார். ‘

இதையும் படியுங்கள் : வாரிசு சம்பளம் இத்தனை கோடி... நயன்தாராவை முந்திய ராஷ்மிகா?

மேலும் வடிவேலு தன்னுடன் இருக்கும் சக நடிகர்கள் வளர்ந்துவிடக்கூடாது என்று நினைப்பவர் என்று பலரும் கூறுகிறார்கள் என்று கேட்டதற்கு நானே பலமுறை சொல்லியிருக்கிறேன். இது இன்றோ அல்லது நேற்றோ தொடங்கியது அல்ல காலம் காலகமாக நடந்து வருகிறது. என் எஸ்.கே தொடங்கி சந்திரபாபு, நாகேஷ் கவுண்டமணி செந்தில் உட்பட தன்னை மாதிரி இன்னொருவன் வந்துவிட்டால் அந்த இடத்தில் தனக்கு வேலை இல்லை என்று ஆகிவிடும். அதனால்தான் இப்படி. அடுத்தவர்கள் தனது இடத்திற்கு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் அனைவரும் தெளிவாக இருக்கிறார்கள் அதுபோலத்தான் வடிவலுவும்.

நான் ஸ்டண்ட் மாஸ்டர் ஆகவேண்டும் என்றுதான் வந்தேன். ஆனால் காலத்தின் கட்டாயம் ஒரு நகைச்சுவை நடிகனாக மாறிவிட்டேன். நான் ஒரு படம் இயக்கும்போது அந்த படத்தில் நிச்சயம் ஸ்டண்ட் மாஸ்டராக நானே இருப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் நாங்கள் வடிவேலுவுடன் நடிக்கும்போது அவர் நல்ல வரவேண்டும் என்று நினைத்து நடித்தோம். ஆனால் இப்போது இருப்பவர்கள் அவர்கள் நன்றாக வரவேண்டும் என்று நடிக்கிறார்கள். அதுவே நாய் சேகர் படத்தின் தோல்விக்கு காரணமாக இருக்கலாம்.

இதை தாண்டி நாம நடித்ததை தான் மக்கள் பார்க்க வேண்டும் என்ற நிலை மாறிவிட்டது. இப்போது மக்களுக்கு இதை பார்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. யாராக இருந்தாலும் தூக்கி எறியக்கூடிய மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள் என்று கூறியுள்ளார். யோகி பாபு திறமையால் முன்னுக்கு வந்தவர். திறமையும் நம்பிக்கையும் இருந்தால் யார் வேண்டுமானாலும் முன்னுக்கு வரலாம் என்பதற்கு யோகிபாபு உதாரணம் என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment