Advertisment

வாரிசு சம்பளம் இத்தனை கோடி... நயன்தாராவை முந்திய ராஷ்மிகா?

கன்னடத்தில் வெளியான க்ரிக்கி பார்ட்டி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா.

author-image
WebDesk
New Update
வாரிசு சம்பளம் இத்தனை கோடி... நயன்தாராவை முந்திய ராஷ்மிகா?

தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா விஜயுடன் வாரிசு படத்தில் நடித்தற்காக எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது தொடர்பான தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

கன்னடத்தில் வெளியான க்ரிக்கி பார்ட்டி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து ஒரு புனித் ராஜ்குமாருடன் அஞ்சானிபுத்ரா உள்ளிட்ட சில கன்னட படங்களில் நடித்த இவர், சலோ என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் பாராட்டுக்களை பெற்ற ராஷ்மிகா அடுத்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட சரிலேரு நீக்கெவரு, புஷ்பா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : துணிவா, வாரிசா,.. ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பிரபு

இதன் மூலம் தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகியாக உள்ள ராஷ்மிகா 2021-ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இந்தியில் குட்பை என்ற படத்தில் நடித்த இவர், தற்போது விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்துள்ளார்.

publive-image

தமிழ் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகியுள்ள இந்த படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கியுள்ளார். தில் ராஜூ தயாரித்துள்ள வாரிசு படம் வரும் 11-ந்’ தேதி வெளியாக உள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் சரத்குமார், ஸ்ரீகாந்த், ஷாம், பிரகாஷ்ராஜ், கு’ஷ்பு, யோகிபாபு, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் தமன் இசையமைத்துள்ளார்.

இதையும் படியுங்கள் : ‘விதி தன் வேலையை சரியா செய்திருக்கு’: வடிவேலுவை சீண்டிய முத்துக்காளை

இந்நிலையில், வாரிசு படத்தில் நடித்ததற்காக நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு 4 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அல்லு அர்ஜூனுடன் இவர் நடித்த புஷ்பா படம் வரை 3 கோடி சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த ராஷ்மிகாவுக்கு, அந்த படத்தின் வெற்றியால் தனது சம்பளத்தை உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது.

புஷ்பா படத்திற்கு பின் வாரிசு படத்தில் கமிட் ஆன ராஷ்மிகா 4 கோடி சம்பளம் பெற்றுள்ளதாகவும், இந்த படத்தை தொடர்ந்து அடுத்து இந்தியில் நடிக்க உள்ள படத்திற்காக தனது சம்பளத்தை 5 கோடியாக உயர்த்திவிட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வாரிசு படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தால் மீண்டும் அவர் தனது சம்பளத்தை உயர்த்த வாய்ப்புள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment