பாரதிராஜா முயற்சியில் புதிய தயாரிப்பாளர் சங்கம்: உறுப்பினராக இணைய அதிரடி நிபந்தனை

Tamil Producers: டி.எஃப்.பி.சி 1,300 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

By: Updated: August 5, 2020, 07:23:17 AM

Tamil Film Producer Council: கொரோனா வைரஸ் பூட்டுதலால், சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் பல படங்கள் ரிலீஸாகாமல் இருக்கின்றன. இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒரு பகுதியினர் தொழில்துறையின் பிரச்சினைகளை தீர்க்க, தமிழ் திரைப்பட செயல் தயாரிப்பாளர்கள் (Tamil Film Active Producers Association) சங்கத்தை தொடங்கியுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது மூன்று படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்கள் மட்டுமே, இந்த புதிய சங்கத்தில் உறுப்பினர்களாக இணைய முடியும்.

நாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா

“புதிய சங்கம் எந்த வகையிலும் தற்போதுள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சிலுடன் (டி.எஃப்.பி.சி) முரண்படவில்லை, இது பெற்றோர் அமைப்பாக இருக்கும். செயலில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர்களின் ஆர்வத்தை பாதுகாப்பதற்காக ஆக்டிவ் புரொடியூஸர் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு, சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகம் ஆகியவற்றில் ஆர்வமுடையவர்கள் மீது, அதிக கவனம் தேவை” என இயக்குனரும் தயாரிப்பாளருமான பி.பாரதிராஜா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

டி.எஃப்.பி.சி 1,300 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. தமிழ் திரையுலகம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 200 திரைப்படங்களை வெளியிடும் அதே வேளையில், இந்த சங்கம் சுமார் 125-130 முதல் முறை தயாரிப்பாளர்களை உறுப்பினர்களாகப் பெறுகிறது. வாக்குறுதிகளால் ஈர்க்கப்பட்டாலும், அவர்களில் பெரும்பாலோர் ஒரு திரைப்படத்துடன் ஒதுங்கி விடுகிறார்காள்.

கொரோனாவுக்கு பலியான ராணிப்பேட்டை நர்ஸ்: போராடி நடந்த இறுதிச் சடங்கு

“60-100 உறுப்பினர்கள் மட்டுமே வழக்கமான தயாரிப்பாளர்களாக தொடர்ந்து புதிய படங்களை உருவாக்கி வருகின்றனர். TFPC அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு அமைப்பாக இருந்தாலும், ஆக்டிவாக உள்ள தயாரிப்பாளர்களின் நலன்கள் எப்போதாவது தான் கவனம் பெறுகின்றன. மூத்த உறுப்பினர்கள் தான் சங்கத்திலிருந்து கிடைக்கும் நல்ல விஷயங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கின்றனர்” என புதிய அமைப்பிற்கு அழுத்தம் கொடுக்கும், தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Tamil film active producers association for active producers

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X