தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஜூன் 30 மாதம் தேதிக்குள் தேர்தல் நடத்த உத்தரவு

சிறப்பு அதிகாரியாக மஞ்சுளா என்பவரை நியமித்திருப்பதாகவும் அவர் தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

By: Published: February 12, 2020, 5:57:22 PM

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஜூன் 30 மாதம் தேதிக்குள் தேர்தல் நடத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் சங்கத்தில் முறைகேடுகள் நடத்திருப்பதாக உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளரான என்.சேகர் என்பவரை தனி அதிகாரியாக தமிழக வணிகவரித்துறை நியமித்தது.

’பச்சைக் கிளியோட கண்ணே பட்டுடும் போல’ அதுல்யா ரவியின் அட்டகாச படங்கள்

தனி அதிகாரியை நியமித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தனி அதிகாரி நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரினார். அதே போல் ஓய்வு பெற்ற நீதிபதி கண்கானிப்பில் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தனி நிர்வாகியின் நியமனத்துக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

மேலும், சேகர் பதவி உயர்வு பெற்று கடந்த ஜனவரி மாதம் பணிமாறுதல் ஆனதால், அந்த பதவிக்கு புதிய சிறப்பு அதிகாரியாக பதிவுத் துறை உதவி ஐஜி மஞ்சுளாவை என்வரை தமிழக அரசு நியமித்து அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் நிலுவையில் உள்ளது.

காண்டாகி காதலை எதிர்க்குறாங்க..! மேடைக்கு வந்த வி.ஜே. மணிமேகலை

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், சிறப்பு அதிகாரி பதவி காலம் முடிவடைவதாலும், அவர் பணிமாறுதல் செய்யப்பட்டதாலும், அடுத்த ஓராண்டுக்கு புதிய சிறப்பு அதிகாரியாக பதிவுத் துறை உதவி ஐஜி மஞ்சுளாவை நியமித்து, ஜனவரி 2 ஆம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளதாக தெரிவித்தார்.

இதற்கு விஷால் தரப்பு ஆஜரான வழக்கறிஞர், ஆட்சேபனை தெரிவித்தார்.
தயாரிப்பாளர் சங்கத்திற்கு தமிழக அரசு நியமித்த சிறப்பு அதிகாரி பதவி காலம் மார்ச் மாதம் முடிவடைவதால், தயரிப்பாளர் சங்க தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும் என்று வாதிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறப்பு அதிகாரியாக மஞ்சுளா என்பவரை நியமித்திருப்பதாகவும் அவர் தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டது.

நடிகர் விஷால் தரப்பில், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு அரசால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரியை வைத்து தேர்தல் நடத்த கூடாது என்றும் ஓய்வு பெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தல் நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது

தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தரப்பில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடந்த 4 முறை நடத்தப்பட்ட தேர்தல்கள் ஓய்வு பெற்ற நீதிபதிகளே நடத்தி முடித்துள்ளனர் என குறிப்பிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை வரும் ஜூன் மாதம் 30 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். அதற்காக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை நியமிப்பதாகவும், அவருக்கு உதவ இரு நபர்களை நியமிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

நைனிகா தெறி பேபி: மிரட்டும் குட்டி தேவதை

அவர்கள் யார் என்பது பின்னர் தெரிவிக்கப்படும் என குறிப்பிட்ட நீதிபதி, தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படும் ஓய்வு பெற்ற நீதிபதிக்கு சம்பளமாக 3 லட்ச ரூபாயை தயாரிப்பாளர் சங்க சிறப்பு
அதிகாரி வழங்க வேண்டும்

தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது குறித்த விவரங்களை ஓய்வு பெற்ற நீதிபதி ஜூலை30 ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Tamil film producer council election case

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X