சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கேப்டன் விஜயகாந்த் இடையேயான நட்பு குறித்து திரைப்படத் தயாரிப்பாளர் காஜா மைதீன் சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.
Advertisment
திரைப்பட தயாரிப்பாளர் காஜா மைதீன் சமீபத்தில் சித்ரா லட்சுமணன் உடன், அவரது யூடியூப் சேனலில் உரையாடினார். அந்த உரையாடலில் விஜயகாந்த்க்கும் எனக்கும் இருப்பது போன ஜென்மத்து உறவு. வாஞ்சிநாதன் பட பூஜை அன்றே அனைத்து பகுதிகளுக்கும் ரூ.20 கோடிக்கு விநியோக உரிமை விற்பனையாகிவிட்டது.
கேப்டனுக்கு முதன்முதலில் கேரவனை அறிமுகப்படுத்தியப்போது, நான் வேலை செய்ய வந்திருக்கேன், ஓய்வு எடுக்க வரல என கோபப்பட்டார், என்று கூறினார்.
மலேசியா ஸ்டார் நைட் நிகழ்ச்சிக்கு ரஜினி வந்தபோது, அவரை கூட்டத்தில் அரவணைத்து அழைத்து வந்தவர் விஜயகாந்த். அந்த கூட்டம் கேப்டனை பார்க்க வந்திருந்தாலும், ரஜினி சாரை பத்திரமாக அழைத்து வந்தார் விஜயகாந்த்.
முன்னதாக, ரஜினி சாரை நிகழ்ச்சி அழைக்கச் சென்றபோது, அவர் நான் வரணுமா என கேட்டார். அதற்கு விஜயகாந்த் நீங்கள் அவசியம் வரணும் என கூப்பிட்டார்.
ரஜினி சார் மலேசியா வந்தப்போது, அவரது சூட்கேஸை நான் வாங்கிக் கொள்ள கேட்டேன், ஆனால் அவர் மறுத்து அவரே கொண்டு வந்தார். மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு ரஜினி பஸ்ஸில் தான் பயணம் செய்தார். அப்படி மாறி மாறி பயணம் செய்ததில் அவரது சூட்கேஸை தவறவிட்டார். புதிய ஆடை வாங்கி தர முயற்சித்தப்போது மறுத்து, விஜயகாந்திடம் வேட்டி சட்டை இருக்கும், அது எனக்கு ஓரளவு பொருத்தமான இருக்கும் என சொல்லி, அதை வாங்கி வரச் சொன்னார். விஜயகாந்த் சார் தன்னிடம் இருந்த புது வேட்டி சட்டையை கொடுத்தார். அதனை அணிந்துதான் ரஜினி சார் அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். இவ்வாறு காஜா மைதீன் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil