/tamil-ie/media/media_files/uploads/2023/04/SS-Chakravarthy.jpg)
நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்கரவர்த்தி
பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி இன்று (ஏப்ரல் 29) மரணமடைந்தார். இன்று மாலை சென்னையில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
நிக் ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்தவர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி. அஜித் குமாரின் அன்பான நண்பராக இருந்த எஸ்.எஸ்.சக்கரவர்த்தி 2000 களின் முற்பகுதியில் அஜித் நடித்த படங்களை தயாரித்து வந்தார். இவர் தயாரிப்பில் அஜித் குமார் ராசி, வாலி, முகவரி, வரலாறு உள்ளிட்ட 10 படங்களில் நடித்துள்ளார். எஸ்.எஸ் சக்கரவர்த்தி மொத்தம் 14 படங்களை தயாரித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: குழந்தை பிறந்தவுடன் விலகிய நடிகை : தமிழும் சரஸ்வதியும் சீரியல் ரசிகர்கள் சோகம்
எஸ்.எஸ்.சக்கரவர்த்தி 2015 ஆம் ஆண்டு வெளியான ‘தொப்பி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அவர் கடைசியாக விமல் நடித்த ZEE5 வெப் சீரிஸ் 'விலங்கு'வில் நடித்தார். இரண்டிலும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், கடந்த 8 மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த எஸ்.எஸ்.சக்கரவர்த்தி நள்ளிரவில் உயிரிழந்தார். இதனையடுத்து எஸ்.எஸ்.சக்கரவர்த்தியின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். எஸ்.எஸ்.சக்கரவர்த்தியின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.