விதிமுறைகளை மீறி ஆண் நண்பருடன் ஜாலி ரைட் – விபத்தில் சிக்கிய பிரபல தமிழ் நடிகை

அவசியத் தேவைக்கு வெளியே செல்ல, கர்நாடக காவல்துறை வழங்கும் பாஸ் ஷர்மிளா பெற்றிருந்தார். ஆனால், அதை தேவைக்கு பயன்படுத்தாமல், ஆண் நண்பருடன் ஊர் சுற்ற அவர் பயன்படுத்தியதாக தெரிய வந்துள்ளது

By: April 5, 2020, 10:28:55 PM

கன்னட சினிமாவின் மிகப் பிரபலமான தயாரிப்பாளராக வலம் வந்தவர் ஆர்.என்.மந்த்ரே. இவரது பேத்திதான் நடிகை ஷர்மிளா மந்த்ரே. ஷர்மிளாவின் அத்தை சுனந்தா முரளி மனோகரும் பிரபல சினிமா தயாரிப்பாளர். தமிழில், ஜீன்ஸ், ஜோடி, மின்னலே, தாம் தூம் உள்ளிட்ட மெகா பட்ஜெட் படங்களை தயாரித்தவர்.


கன்னடத்தில் 2007ஆம் ஆண்டு சஜ்னி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஷர்மிளா மந்த்ரே, சுயம்வரா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ளார். தமிழில் மிரட்டல் படம் மூலமாக 2012ல் என்ட்ரி கொடுத்தார்.

‘ஒரு பெயரைக் கூட ஒழுங்கா போடத் தெரியாதா?’ – விஜய் டிவியை வறுத்தெடுத்த ‘லொள்ளு சபா’ நடிகர்

ஆனால் மிரட்டல் படம் எதிர்பார்த்த அளவிற்கு கை கொடுக்காததால் மீண்டும் கன்னட சினிமா பக்கமே கவனம் செலுத்தினார். 2013-ம் ஆண்டு அல்லரி நரேஷ் உடன் தெலுங்கில் இவர் நடித்த கெவ்வு கேகா படம் பெரிய வெற்றி பெற்றது. பின்னர் தமிழில் நயன்தாரா நடித்த மாயா படத்தின் கன்னட ரீமேக்கில் 2017ஆம் ஆண்டு ஷர்மிளா நடித்தார்.

அதன் பிறகு கன்னடத்தில் மட்டும் நடித்துக் கொண்டு தமிழில் தயாரிப்பாளராக மாறினார். இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு, சண்டக்காரி, நானும் சிங்கிள்தான் ஆகிய படங்களை தயாரித்தார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ஆண் நண்பர் லோகேஷ் உடன் தனது ஜாகுவார் காரில் வெளியில் சென்றுள்ளார். சனிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் பெங்களூரு வசந்த் நகர் ரயில்வே பாலத்தில் கார் சென்றபோது நிலை தடுமாறி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஷர்மிளாவின் முகம் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நான்கு மாடி கட்டிடத்தை கொரோனா தடுப்பு பணிக்கு கொடுத்த ஷாருக் கான்

இதை அடுத்து கன்னிங்ஹாம் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான போர்ட்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஷர்மிளா காரின் முன் பகுதி பலத்த சேதமடைந்துள்ளது.

அவசியத் தேவைக்கு வெளியே செல்ல, கர்நாடக காவல்துறை வழங்கும் பாஸ் ஷர்மிளா பெற்றிருந்தார். ஆனால், அதை தேவைக்கு பயன்படுத்தாமல், ஆண் நண்பருடன் ஊர் சுற்ற அவர் பயன்படுத்தியதாக தெரிய வந்துள்ளது. அனுமதி பாஸை தேவையின்றி பயன்படுத்தியதாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று அச்சத்தால் நாடே வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலையில், நடிகை ஷர்மிளா தனது ஆண் நண்பருடன் அசுர வேகத்தில் காரில் சென்று விபத்தில் சிக்கிய சம்பவம் அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Tamil movie actress sharmiela mandre met accident bengaluru cops book case

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement