கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ தொடங்கியதிலிருந்து கோலிவுட் திரையுலகம் ஒரு கடினமான காலத்தை கடந்து வருகிறது. பல்வேறு தொழில்களுக்கு கட்டுப்பாடு விதித்த மத்திய அரசு, திரைப்பட படப்பிடிப்புகளை ரத்து செய்தது.
வனிதா குறித்த போலி யூடியூப் சேனல் – யாரை டேக் பண்ணாங்கனு தெரிஞ்சா அசந்துருவீங்க
பொது முடக்கம் அமல் படுத்தப்பட்ட ஐந்து மாதங்களில், பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் தமிழக முதல்வரை சந்தித்து, திரைப்பட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், படப்பிடிப்பை மீண்டும் தொடங்க அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொண்டனர். இதற்கிடையே அண்மையில் தமிழக அரசு வழங்கிய தளர்வுகளில், திரைப்படத் துறையின் உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியை தரும் வகையில், திரைப்பட படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தளர்வுகள் குறித்த தமிழக அரசின் அறிக்கையில், ”செட்டில் 75 பேருடன் திரைப்பட படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பின் போது அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. படத்தின் செட்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு சில தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் தங்கள் சமூக ஊடகங்களில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
சில வாரங்களுக்கு முன்பு தொலைக்காட்சி படப்பிடிப்பை மீண்டும் நடந்த தமிழக அரசு அனுமதியளித்தது. இதனையடுத்து சீரியல்களில் புத்தம் புதிய எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சில மாதங்களாக வருமானம் இல்லாமல் போராடி வரும் தியேட்டர் உரிமையாளர்களை இந்த அறிக்கை ஈர்க்கவில்லை.
Tamil News Today Live: வசந்தக்குமார் படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
தவிர, விஜய் நடித்து முடித்திருக்கும் ‘மாஸ்டர்’ வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறது. ரஜினியின் ‘அண்ணாத்த’, கமலின் ‘இந்தியன் 2’, அஜித்தின் ‘வலிமை’ உள்ளிட்டப் படங்களின் படபிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”