சின்னத்திரை படபிடிப்பை தொடங்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
சின்னத்திரை படப்பிடிப்பை மீண்டும் தொடங்க அனுமதி அளிக்க வேண்டுமென, தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழக முதல்வர் பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ளது. அதோடு படப்பிடிப்பின் போது சில நிபந்தனைகளையும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
’பொறந்தது திருச்சி, புகுந்தது திருவனந்தபுரம்’ – வனிதா கிருஷ்ண சந்திரன்
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
* சுற்றுச்சுவர் உள்ள வீடுகளுக்கு உள்ளே அல்லது அரங்கிற்குள் மட்டும் (Indoor shooting only) ) படப்பிடிப்பு நடத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு (Containment Zones) இது பொருந்தாது.
* பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது. எனினும், ஊரகப் பகுதிகளில் (தடை செய்யப்பட்ட பகுதிகளைத் தவிர – Except containment zone) பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த தடை ஏதும் இல்லை.
* பார்வையாளர்களை கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது.
* படப்பிடிப்பு நடத்தப்படும் அரங்கம் அல்லது வீட்டினை படப்பிடிப்பிற்கு முன்பும், பின்பும் கண்டிப்பாக கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும். படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நடிகர்கள், நடிகைகள் தவிர மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். நடிகர், நடிகைகளும் படப்பிடிப்பின் இடைவெளியின்பொழுது தவறாமல் முகக்கவசம் அணியவேண்டும்.
* படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் அவ்வப்போது சோப் அல்லது கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
* படப்பிடிப்பு நடத்தப்படும் வளாகத்திற்குள் வரும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். அதேபோன்று, படப்பிடிப்பிற்கு உபயோகப்படுத்தப்படும் கேமரா, கிரேன் உட்பட அனைத்து சாதனங்களையும் கிருமிநாசினி கொண்டு அவ்வவ்போது சுத்தம் செய்ய வேண்டும்.
* சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருக்கும் கலைஞர்களையோ அல்லது தொழில்நுட்ப பணியாளர்களையோ படப்பிடிப்பு வளாகங்களுக்குள்அனுமதிக்கக்கூடாது. இத்தகைய அறிகுறிகள் உள்ளவர்களை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.
* அதிகபட்சமாக நடிகர், நடிகை தொழில்நுட்ப பணியாளர்கள் உட்பட 20 எண்ணிக்கைகளுக்கு மிகாமல் படப்பிடிப்பு நடத்தலாம்.
* சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சிஆணையரிடமும், பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவரிடமும் முன் அனுமதி பெற வேண்டும்.
ஆந்திராவைத் தாக்கிய கோயம்பேடு: இதுவரை 155 பேருக்கு கொரோனா
* மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
படப்பிடிப்புக்கு வருகை தரும் அனைவரும் மேற்கண்ட நிபந்தனைகளை தவறாமல் கடைபிடிப்பதை, சின்னத்திரை தயாரிப்பாளர்கள் உறுதி செய்து கொண்டு, படப்பிடிப்பு நடத்திட அனுமதி வழங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் புத்தம் புது எபிசோட்களை டிவி-யில் பார்க்கலாம்.
"அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.