tamil new year movie release : ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு நம் தமிழக மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புதிய ஆண்டு பிறப்பதை கொண்டாடும் இந்நாளை இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட தமிழர்கள் வாழக்கூடிய வெளிநாடுகளிலும் விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நாளை புத்தாண்டு விடுமுறை என்பதால் பலரும் பலவிதமான ப்ளான்களை செய்து இருப்பார்கள். இந்த விடுமுறையில் ரசிகர்கள் தியேட்டரில் படங்களை கண்டுகளிக்க ஆர்வமுடன் இருக்கின்றனர். அந்த வகையில் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக நாளை திரைக்கு வரவிருக்கும் புதுப்படங்களின் லிஸ்ட் இதோ..
வாட்ச்மேன்:
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வாட்ச்மேன் திரைப்படம் புத்தாண்டு ஸ்பெஷலாக திரைக்கு வந்துள்ளது. த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். ஜி.விக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியாகி இருந்த இந்த படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
சூர்யா தரும் தமிழ்ப் புத்தாண்டு பரிசு
கேங்க்ஸ் ஆஃப் மெராஸ்:
தயாரிப்பாளர் சி.வி.குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். வேலு பிரபாகரன், நரேன், டேனியல் பாலாஜி, பகவதி பெருமாள், சாய் ப்ரியங்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரியல் லைஃப் ரவுடிசம் குறித்த கதை என்று பேசப்பட்டுள்ள இந்த படம் நேற்று வெளியாகியது.
ராக்கி தி ரிவெஞ்ச். :
லாங் கேப்பக்கு பின்பு நடிகர் ஸ்ரீகாந்த் நடித்துள்ள ராக்கி தி ரிவெஞ்ச் திரைப்படம் நாய்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
த்ரில்லர் அண்ட் க்ரைம் ஜானர் பாணியில் வெளியாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு.
ஹாலிவுட் ரிலீஸ்:
ஹாலிவுட்டில் இருந்து இரண்டு படங்கள் வெளியாகியுள்ளது.
ஹெல்பாய்:
நெய்ல் மார்ஷல் இயக்கத்தில் டேவிட் ஹர்போர் லீட் ரோலில் நடிக்க வெளியாகும் படம் ஹெல்பாய். முதல் இரண்டு பாகங்கள் வெளியாகி ஹிட்டானதால், இப்போது மூன்றாவது பாகம் வெளியாகியுள்ளது.
பெட் சிமட்ரி :
பெட் சிமட்ரி என்கிற நாவலை தழுவி உருவாக்யிருக்கும் படம் ‘பெட் சிமட்ரி’. கெவின் கோல்ஷ், டேன்னிஸ் விட்மைர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம், குழந்தைகள் விரும்பும் ஹாரர் படமா இருக்கும்.