Tamil Serial News : அழகு சீரியலில் அழகம்மை எப்போது முக்கிய தேவையோ அப்போது மட்டும் அவரை அழைத்து நடிக்க வைப்பார்கள். அழகம்மையா நடிச்சு இருக்கும் ரேவதி முக்கியமான காட்சிகளில் இருக்கவே மாட்டார். யார் என்ன சொன்னாலும் சீரியல் குழு மட்டும் ரேவதியை நாங்கள் எங்களால் முடிந்த நேரத்தில் மட்டும்தான் கூப்பிட்டு ஷூட்டிங் நடத்துவோம் என்பதில் உறுதியாக இருக்கிறது.
திருநாவை அர்ச்சனாவுக்கு கல்யாணம் செய்துட்டு, பிரச்சனைன்னதும் காணாம போயிட்டாங்களான்னு சம்பந்தி கேட்கற அளவுக்கு அழகம்மையின் நிலை இருந்தது. இல்லை சம்பந்தி.. அழகு மனசு சரி இல்லைன்னு ஊருக்கு போயிட்டா என்று பழனிச்சாமி வாத்தியார் சொல்லி சமாளிச்சுடுவார். வீட்டுக்கு அவசரமா போயி. சம்பந்தி அம்மா எங்கேன்னு கேட்டா. இப்போதுதான் அம்மா கோயிலுக்கு போனாங்கன்னு சொல்லுவாங்க. கோயில் இல்லையா கடை. பொய் சொல்றோம்னு ஆகிப்போச்சு, இதில் கடை என்ன கோயில் என்ன அடிச்சு விட வேண்டியதுதான்.
Advertisment
Advertisements
கோர்ட்டில் முக்கிய சீன் நடக்குது. அப்பு சுதாவுக்கா, இல்லை அப்பாவைப் பெத்த பாட்டிக்கா என்று உரிமைப் போராட்டம் நடக்குது. சுதா மாமியாருக்கு அப்புவை வீட்டில் வச்சு இருப்பது பிடிக்கலைன்னு வாக்கீலே சொல்றார். பாட்டி அழகம்மை வீட்டில் இல்லை. மல்லிகா எந்த ஊரில் இருந்து வந்தாளோ அந்த ஊருக்கு மல்லிகா எப்படிப்பட்டவள், யார் என்பது குறித்து விசாரிக்க புறப்பட்டு இருக்காங்களாம்.
லட்டு மாதிரி 3 பையனை வச்சுக்கிட்டு, புருஷனையும் விட்டுட்டு இந்த துப்பறியும் சிங்கம் ஊருக்கு புறப்பட்டு போயிருக்கிறதாம். அதுவும் தெரியாத ஒரு ஊருக்கு. உடம்பு சரி இல்லாத அழகம்மை, அடிக்கடி ஒய்வு எடுக்கப் போகும் அழகம்மை இந்த முறை மல்லிகா குறித்த விவரங்களை சேகரிக்க ஒரு தென்றல் புயலாய் வருமோ என்பது போல் புறப்பட்டு இருக்கார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"