Tamil Serial News: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தான் தற்போது டி.ஆர்.பி-யில் முன்னணியில் உள்ளது.
ரசிகர்கள் பொறாமைப்படும் அளவுக்கு, பாரதியும் கண்ணம்மாவும் அவ்வளவு அந்யோன்யமாக இருந்து வந்தனர். யார் கண் பட்டதோ, இப்போது நாம் யூகிக்காத பல பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
சாப்ட்வேர் இன்ஜினியர் டூ மாடல்: பிக் பாஸ் சனம் ஷெட்டி!
கண்ணம்மாவின் நடத்தையை சந்தேகித்து, அவள் வயிற்றில் வளர்வது தனது குழந்தை இல்லை எனும் முடிவுக்கு வந்து விடுகிறான் பாரதி. ஆனால் இதை வெளியில் சொல்ல முடியாமல், கண்ணம்மாவுடன் பேசுவதை தவிர்த்து விடுகிறான். கண்ணம்மாவுக்கும், குடும்பத்தினருக்கும் என்ன நடந்தது எனத் தெரியாமல் குழம்பிப் போகிறார்கள். அப்போது ‘கண்ணம்மா சுமக்குறது என்னோட குழந்தை இல்ல, அது வேற ஒருத்தனோடது, இவ ஒழுக்கங்கெட்டவ’ என்கிறான் பாரதி. இதற்கு பாரதியின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கண்ணம்மாவுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். ஆனால் கண்ணம்மாவோ தான் இருக்கும் இடத்தை யாருக்கும் தெரியப்படுத்தாமல், பெட்ரோல் பங்கில் வேலை செய்து, தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறார்.
கண்ணம்மாவை தேடிக் கண்டுபிடித்து கொண்டு வந்து மீண்டும் பாரதியுடன் சேர்த்து வைத்து விடுவார்களோ என்று பயப்படும் வெண்பா, ’எப்படியாவது விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கிடு’ என பாரதியை தூண்டி விடுகிறாள் பாரதி. அதனால் கண்ணம்மாவிடம் கையெழுத்து வாங்க கிளம்புகிறான் பாரதி.
பெரியாரிஸ்ட் டூ பாஜக: குஷ்பு பயணித்த அரசியல்
பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் மற்றொரு பெண்ணிடம், கண்ணம்மாவை சந்திக்க வேண்டுமென சொல்கிறான். அப்போது, “என்ன வருண் கூட சந்தோஷமா இருப்பன்னு பாத்தா, இப்படி கஷ்டப்பட்டுட்டு இருக்கியே” என கண்ணம்மாவை கிண்டல் செய்கிறான் பாரதி. ”நம்ம பிரிஞ்சிட்டாலும், இந்த ஊர் உலகம் நம்ம சேர்ந்து இருக்கறதா தான நெனச்சிட்டு இருக்கும். அதனால் எனக்கு விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டுக்கொடு” என கண்ணம்மாவிடம் கேட்கிறான் பாரதி. அதற்கு, “குழந்தை பிறந்ததும், டி.என்.ஏ. டெஸ்ட் எடுத்து அந்த குழந்தை உன்னுடையதுன்னு நிரூபிச்சதுக்கு அப்புறம் தான் உனக்கு டைவேர்ஸ் தருவேன். அதுக்கு முன்னாடி எல்லாம் கையெழுத்து போட முடியாது போடா” என படு பயங்கரமாக பேசி அனுப்புகிறாள் கண்ணம்மா.
அடுத்து என்ன நடக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”