Bharathi Kannamma Serial : அப்பா ஒன்று அம்மா இரண்டு என அக்காவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறாள், விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா சீரியலில். டாக்டர் பாரதி, கிராமத்துப் பெண் கண்ணம்மா இருவரை மையமாக இந்த சீரியல் இயக்கப்பட்டு வருகிறது.
பாலிவுட்ல டாப் ஹீரோயின்ஸ்: ஆனா அறிமுகமானது நம்ம ஊர்ல தான்
கண்ணம்மாவுடன் பாரதிக்கு திருமணமானாலும், அவன் மீது அஞ்சலி, வெண்பா என இரண்டு பெண்கள் ஆசைப்படுகின்றனர். கண்ணம்மாவிடமிருந்து பாரதியைப் பிரித்து, அந்த இடத்திற்கு தாங்கள் வர வேண்டும் என்பதே அவர்கள் ஒவ்வொருவரின் எண்ணமும். கண்ணம்மா அப்பாவின் இளையதாரத்தின் மகள் அஞ்சலி. அவளை பாரதியின் தம்பி அகிலனுக்கு பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால் அவளுக்கோ, பாரதியைப் பிடித்து விடுகிறது. இருப்பினும் அவனை அடைவதற்காக, அகிலனை திருமணம் செய்துக் கொள்கிறாள்.
அக்கா என்றபோதிலும், கண்ணம்மாவுக்கு நிறைய தொல்லைகளைக் கொடுத்து வருகிறாள். போதாக்குறைக்கு, பாரதியுடன் மருத்துவ கல்லூரியில் படித்த வெண்பாவுக்கும், அவன் மீது காதல். இன்னொரு பெண்ணும் அவன் மீது ஆசைப்பட, அவளை கொல்வதற்காக விபத்து ஏற்படுத்துகிறாள் வெண்பா. அதில் பாரதிக்கும் அடிபட்டு விடுகிறது. தனக்காக அவன் காத்திருக்க வேண்டும் என்பதற்காக, இனி உனக்கு குழந்தை பிறக்காது, என பொய் சொல்லி விடுகிறாள் வெண்பா. இதற்கிடையே கண்ணம்மா கர்ப்பமாகிறாள். சந்தோஷப் படும் பாரதியை தனது வில்லத்தனங்களால் குழம்ப விடுகிறாள்.
அது தன் குழந்தை தான் என்பதில் உறுதியாக இருக்கிறான் பாரதி. இருப்பினும் அவனது குழப்பம் தெளியவில்லை. இதனை வெளியில் சொல்லவும் முடியாமல் மறக்கவும் முடியாமல், தடுமாறுகிறான். பாரதி முன்பு போல தன்னிடம் இல்லை என்பதால் மனமுடைந்துப் போகிறாள் கண்ணம்மா.
கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி
இந்நிலையில் தனது வில்லத்தனத்தை கையில் எடுக்கிறாள் அஞ்சலி. ”எப்போவுமே கண்ணம்மா... கண்ணம்மான்னு பின்னாடியே சுத்திட்டு இருக்க பாரதி, இப்போ அவள முகம் கொடுத்துக் கூட பாக்குறது இல்லயே. கண்ணால எரிக்கிற மாதிரி பாக்குறான். நேத்து பாக்குறேன், அவ என்னமோ கொண்டு வந்து கொடுக்குற, அத அவன் வாங்காம தள்ளி விட்டு போறான். அப்படி என்ன தான் இருக்கும். கொஞ்ச நாள் இந்த அகில் தொல்ல தாங்காம, கண்ணம்மா கிட்ட எந்த வம்பும் பண்ணாம ஒதுங்கியே இருந்தேன். இப்போ காத்து நம்ம பக்கம் வீசுற மாதிரியே இருக்கு. பாரதி, கண்ணம்மா மேல காண்டா இருக்குற இந்த நேரத்துல நாமளும் எதாச்சும் கொடைச்சல் கொடுத்தோம்ன்னு வச்சிக்க, அவள அப்படியே இங்கருந்து வெரட்டி விட்டுடலாம். எப்போவுமே எதிரி வீக்கா இருக்குற நேரத்துல தான் இன்னும் நல்லா அடிக்கணும்” என வேலைக்காரியிடம் தனது பிளான்களை சொல்கிறாள் அஞ்சலி.
அதற்கு வேலைக்காரியும், ”சூப்பர் மா. ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னிக்கு தான் பழைய அஞ்சலியா ஃபார்முக்கு வந்துருக்கீங்க” என்கிறாள். அதற்கு ”ஆனா இந்த அகில் கிட்ட தான் கொஞ்சம் உஷாரா இருக்கனும். எந்த நேரத்துல எப்படி வருவான்னே தெரியாது” என அஞ்சலி சொல்ல, அங்கே ஒரு ட்விஸ்ட்.
’வர வேண்டிய நேரத்துல கரெக்டா வந்துருவேன்’ என்றவாறு அஞ்சலி பேசியதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அகில் கூறுகிறான். அஞ்சலியும், வேலைக்காரியும் வாயடைத்துப் போகிறார்கள்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”