DD National Channel : கோவிட் 19 தொற்று லாக்டவுன் காலம் ஒரு பேரிடர் காலம் என்று சொல்லலாம். ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சிகளில் எந்த ஒரு நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகாமல் ஒரு வித பீதியில் மக்கள் இருந்த நிலையில், டிடி நேஷனல் சேனல், முதலில் ராமாயணத்தை காலை, மாலை என்று இரு வேளையும் ஒளிபரப்பத் துவங்கியது. ராமாயணத்துக்கு எதிர்பார்த்ததை விட மக்கள் அமோக வரவேற்பு கொடுத்தார்கள். உலகெங்கிலும் உள்ள இந்திய மக்கள் இந்த தொடரை பார்த்து ரசித்தார்கள். ரேட்டிங்கில் முதல் 10 இடங்களில் எப்போதும் இடம் பிடிக்காத டிடி நேஷனல், இந்த சமயத்தில் சரசரவென்று முதலிடத்தை பிடித்தது. அடுத்து, மகாபாரதம், ஸ்ரீ கிருஷ்ணா, விஷ்ணுபுரா போன்ற புராதன சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. இப்படி ஒளிபரப்பாகி வரும் புராதன சீரியல்கள் எல்லாவற்றுக்குமே நல்ல வேரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த லாக்டவுனிலும் செம்ம பிஸியான ஒரே ஆங்கர் நம்ம பிரியங்கா தான்!
தமிழில் ஸ்டார் விஜய் டிவியும், இதே போல மகாபாரதம் தொடரை ஒளிபரப்பத் துவங்கியது. இந்தியில் இருந்து மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட இந்த மகாபாரதம் சீரியல், விஜய் டிவியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ஒளிபரப்பு செய்யப்பட்ட போது, மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று இருந்தது. இப்போது மறு ஒளிபரப்பிலும் விஜய் டிவி ஒளிபரப்பு செய்யும் மகாபாரதம் சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அடுத்து, விஜய் டிவி ராமாயணம் இதிகாசத் தொடரையும் விரைவில் ஒளிபரப்ப உள்ளது.
முழுக்க முழுக்க வாடிக்கையாளர்களுக்காகவே… அசத்தும் ஸ்டேட் பேங்க்!
லாக்டவுன் தளர்வில் தொலைக்கட்சி சீரியல்களை 60 பேரை வைத்து ஷூட்டிங் நடத்தலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கிய நிலையில், சீரியல்கள் ஷூட்டிங் என்று நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் களம் இறங்கி இருக்கிறார்கள். விஜய் டிவியில், வரிசையாக ஒளிபரப்ப இருக்கும் சீரியல்கள் குறித்த ப்ரோமோ வெளியாகி வந்தது. ஒரு சில சீரியல்கள் ஒளிபரப்பாகவும் துவங்கி இருந்தன. மீண்டும் லாக்டவுன் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்ட நிலையில், ப்ரோமோக்கள் வெளியாவது நின்று பழைய நிகழ்ச்சிகள் மீண்டும் மறு ஒளிபரப்பு என்று களம் இறங்கி இருக்கிறது விஜய் டிவி. சன் டிவி இன்னும் பழைய சீரியல்களையே மறு ஒளிபரப்பு செய்து வருகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”