இந்த லாக்டவுனிலும் செம்ம பிஸியான ஒரே ஆங்கர் நம்ம பிரியங்கா தான்!

திருமணத்திற்கு பின்னரும் பிரியங்கா தொகுப்பாளினியாக கலக்கி வருவகிறார்

By: Updated: June 16, 2020, 02:50:30 PM

vijay tv anchor priyanka super singer: எவ்வளவு கலாய்த்தாலும் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல், காமெடியாகவே நிகழ்ச்சியைக் கொண்டு செல்வது விஜய் டிவி பிரியங்கா ஸ்டைல். பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள் .

அதில் டிடி-க்கு பிறகு தமிழ்நாட்டில் நம்ம விஜய் டிவி பிரியங்கா தான். விஜய் டிவி தொகுப்பாளர்கள் சிலர், திரையுலகிலும் கலக்கி வந்தாலும், இவர் மட்டும் இன்னும் திரைப்பட நிழல் படாமலேயே உள்ளார். இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகியாக இருந்து வருகிறார். கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் இவர் நடுவராக பங்குபெற்றார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் பிரியங்காவின் பவரை.

இவரது பிரபலமே இவரின் சிரிப்பு தான், இவரின் சிரிப்புக்கு பல ரசிகர்களும் உள்ளனர். சின்னத்திரை வட்டாரத்தில் எப்போதுமே பிஸியாக இருக்கும் பெண் ஆங்கர் என்றால் அது பிரியங்கா தான். ஆனால் ஊரே அடங்கி கிடக்கும் இந்த லாக்டவுனில் கூட பிரியங்கா பிஸி என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம், இந்த லாக்டவுனில் புதிய வைரலாக பலரும் தனியாக யூடியூப் சேனல்களை ஆரம்பித்து கலக்கிவருகிறார். இதில் பிரியங்காவும் ஒருவர். மேக் அப் டிப்ஸ், ஹோம் டிப்ஸ் என பிரியங்கா வீடியோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறார்.

 

பிரியங்கா சில வருடங்களுக்கு முன்பு, பிரவீன் குமாரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.பிரவீன் குமாரும் விஜய் டிவியின் தயாரிப்பு குழுவில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பின்னரும் பிரியங்கா தொகுப்பாளினியாக கலக்கி வருவகிறார் என்றார் அதற்கு பிரவீனின் ஆதரவும் 100மடங்கு உள்ளது.

குடும்பமே கைவிட்டாலும் வனிதாவின் முயற்சி கைவிடவில்லை! மகள்களுக்காக தான் இத்தனையும்.

சில மாதங்களுக்கு முன்பு பிரியங்கா கர்ப்பமாக இருப்பதாகவும் தகவல்கள் பரவின. ஆனால் அது உண்மையில்லை என்று அவரே கூறியிருந்தார். எத்தனையோ நடிகர் நடிகைகளை பிரியங்கா பேட்டி கண்டிருந்தாலும் பிரியங்காவின் ஃபேவரெட் ஹீரோ தனுஷ் தானாம். இதை பலமுறை அவரே பகிவு செய்துள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Vijay tv anchor priyanka super singer priyanka vijay tv priyanaka ma ka pa super singer hotstar

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X