குடும்பமே கைவிட்டாலும் வனிதாவின் முயற்சி கைவிடவில்லை! மகள்களுக்காக தான் இத்தனையும்.

2 பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு தனி ஒரு பெண்மணியாக வனிதா

vanitha vijayakumar vijay tv
vanitha vijayakumar vijay tv

vanitha vijayakumar vijay tv : பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு நிறைய பேரின் வாழ்க்கை மாறியது. அதில் சீசன் 3 போட்டியாளர் வனிதா விஜயகுமார் பற்றி சொல்லியே ஆக வேண்டும். இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வனிதா.

மிகப் பெரிய சினிமா பின்னணி கொண்டவர் என்றாலும் வனிதா மீத ஏகப்பட்ட விமர்சனங்கள் இருக்கிறது.குடும்ப பிரச்சனை, மகன் பிரிவு, சொத்து தகராறு என ஏகப்பட்ட பிரச்சனைகளால் வனிதாவின் பெயர் டேமேஜ் ஆகியது. ஆனால் அந்த அனைத்தையும் பிக் பாஸ் 100 நாட்களில் மாற்றியது.

big boss vanitha

பிக் பாஸில் கலந்து கொண்ட நாள் முதல் மற்ற போட்டியாளர்களை வச்சி செய்து வந்தார் வனிதா. சொல்லபோனால் வனிதாவால் தான் பிக் பாஸ் டி.ஆர்.பி எகிறியது. இதனால் வனிதாவை தக்க வைத்துக்கொண்ட விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் அவரை கலந்துகொள்ள வைத்தது.

இன்ஸ்டாவில் ஒரு கலக்கு கலக்கும் பாவனா.. டான்ஸ், சிங்கிங் எதையும் விடல

மற்ற இரண்டு சீசன்கள் முடிவடைந்த உடனே அதுக் குறித்த தாக்கம் பார்வையாளர்களிடம் இருந்து 2 நாட்களில் விலகி விட்டது. ஆனால் இந்த சீசன் அப்படி இல்லை தொடர்ந்து மக்கள் பிக் பாஸ் பற்றியே அதிகம் பேசினர். இதனை பயன்படுத்திக் கொண்ட வனிதா, யூடியூபில் சமையல் நிகழ்ச்சியை தொடங்கினார். கூடவே வனிதா தற்போது விமர்சகராகவும் அவதாரமெடுத்துள்ளார்.

வனிதாவை, விஜயக்குமார் குடும்பத்தினர் யாரும் கண்டுக்கொள்ளவது இல்லை. தனியாகவே தனது மகள்களுக்காக வனிதா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு கலக்கி வருகிறார். அவரின் சமையல், மேக் டிப்ஸ் அனைத்தையும் ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசிக்கின்றனர்.

vanitha vijayakumar, vanitha, actress vanitha, bigg boss season 3, வனிதா விஜயகுமார், பொங்கல் வாழ்த்து, வனிதா விஜயகுமார் புகைப்படம் வைரல், bigg boss contestant vanitha vijayakumar, vanitha with daughters, vanitha vijayakumar photos vanitha with daughters pongal wishes, vanitha vijayakumar instagram photos viral

அவரின் மூத்த மகள் தான் வனிதாவிற்கு கேமரா மேன் போல் அனைத்து வீடியோக்களையும் பதிவு செய்கிறார். 2 பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு தனி ஒரு பெண்மணியாக வனிதா இந்த சமூகத்தில் ஜெயித்து காட்டிக் கொண்டிருப்பது உண்மையில் வரவேற்க வேண்டிய ஒன்று தான்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vanitha vijayakumar vijay tv vanitha cook with comali hotstar vanitha youtube channes

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com