Raveena Daha: ரவீனா தாஹா என்றால் யாரென பலருக்கும் நினைவுக்கு வராது. உங்களுக்கு சட்டென விளங்கும் படி சொல்ல வேண்டுமென்றால், இயக்குநர் நேசன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஜில்லா. அந்தப் படத்தில் மோகன்லால், விஜய், காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்கியராஜ் உட்பட பலர் நடித்திருந்தார்கள். 2014 பொங்கலுக்கு வெளியாகிய இந்தப் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் வரும் ஒரு காட்சியில் வெடிகுண்டு வெடித்து, ஒரு இடம் தீப்பற்றி எரியும். அந்த இடத்தில் ஒரு பெண் குழந்தை மேலே இருந்து விழும். அந்த குழந்தையை காப்பாற்றிய விஜய் மருத்துவமனையில் சேர்ப்பார்.
நடிப்பில் மட்டுமல்ல சொந்த பிஸினஸ்ஸிலும் வெற்றி தான்!
ராட்சசன் படத்தில் ரவீனா
அந்த நிகழ்வுக்குப் பிறகு நல்ல போலீஸ் அதிகாரியாக மாறும் விஜய் குற்றவாளிகளை தண்டிப்பார். அந்த குழந்தை தான் ரவீனா தாஹா. இவர் நிறைய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த ’ராட்சசன்’ படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். தவிர, ’தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திலும் நடித்துள்ளார்.
ஸ்டைலிஷ் சேலையில்...
தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ’பூவே பூச்சூடவா’ எனும் தொடரில் நடித்து வருகிறார் ரவீனா தாஹா. நடிப்பதோடு, நடன நிகழ்ச்சிகள், காமெடி நிகழ்ச்சி என பலவற்றிலும் கலந்துக் கொண்டு தன் திறமையை காண்பித்து வருகிறார். தவிர காரைக்கால் அம்மையார், டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0 ஆகியவற்றிலும் நடித்திருந்தார்.
மார்டன் உடையில்...
அக்டோபர் 10, 2002 சென்னையில் பிறந்தார் ரவீனா தாஹா. ’கதை சொல்லப் போறோம்’ என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்தை எஸ். கல்யாண் குமார் இயக்கி, ரிலாக்ஸ் ஏட்ஸ் தயாரித்திருந்தது. முக்கியக் கதாபாத்திரத்தில் மொட்ட ராஜேந்திரன் நடித்திருந்தார்.
ட்ரெண்டியான ட்ரெஸ்ஸிங் சென்ஸ்...
கடன் வாங்கி இருப்பது பத்தி கவலை வேண்டாம்.. வட்டியை குறைத்தது ஐசிஐசிஐ வங்கி!
டான்ஸ் ஆடுவது, இசை கேட்பது, செல்லப்பிராணிகளை வளர்ப்பதும் தான் ரவீனாவின் பொழுதுபோக்கு விஷயங்களாம். ஃபுட்பால் விளையாடுவதில் ஆர்வம் மிகுந்த அவருக்கு உணவிலும் நாட்டம் அதிகம். தென்னிந்திய மற்றும் ஸ்பானிஷ் உணவுகளை விரும்பி சாப்பிடுவாராம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”