Tamil Serial News : கண்மணி தொடரில் கிருஷ்ணவேணி சித்தி தான் அப்பா தர்மதுரையை கொலை செய்தது என்று சவுந்தர்யா சொல்ல... வீடே ரகளையில் கிடக்கிறது. வளர்மதி இதுதான் சாக்கு என்று தனது நாட்டாமையைத் தொடங்கி விட்டாள். 24 மணி நேரத்துக்குள் சவுந்தர்யா இதை நிரூபிக்கணும்.. இல்லேன்னா சாணித் தண்ணிய கரைச்சு, தலையில் ஊத்தி செருப்பு தொடப்பத்தால் அடிப்போம்னு கிருஷ்ணவேணி சொல்ல.... விஜயலட்சுமி அம்மாவால் ஒன்றும் பேச முடியவில்லை.
கிருஷ்ணவேணி சித்திதான் அப்பா முகத்தில் தலையணை வச்சு அமுக்கி மூச்சுத் திணற வைச்சு கொன்றது என்றாலும், நிரூபிக்க ஆதாரம் இல்லை. சித்தப்பா, என்ன உதவி வேணும்னு கேளு கண்ணா.. அண்ணனை கிருஷ்ணவேணி கொலை செய்து இருக்கிறாளா இல்லையா என எனக்கும் தெரிய வேண்டும் என்று சொல்கிறார். உடனே சவுந்தர்யாவுக்கு ஸ்பை கேமிரா ஐடியா வருது. பேனாவில் இருக்கும் ஸ்பை கேமிராவை சித்தப்பா பாக்கெட்டில் வச்சு தைரியமா கிருஷ்ணவேணி கிட்ட பேச சொல்லியும் அனுப்பியாச்சு...
Advertisment
Advertisements
அவரும் குல தெயவம் கோயிலுக்கு போயி அண்ணனுக்காக முள் செருப்பு மிதிக்க போறேன்னு சொல்றார். அப்படி இப்படி பேசி கிருஷ்ணவேணியை உருக வச்சு.. அவங்க உண்மையை சொல்ல வரும்போது... பக்குன்னு வளர்மதி வந்துட்டா. அம்மா.. உனக்கு போன் வந்து இருக்குமான்னு போனை எடுத்துகிட்டே வர்றா. உள்ளே வந்தா சிக்னல் இல்லை... புத்திசாலி பெண்ணாச்சே... எந்நேரமும் கெட்டதை பத்தியே நினைச்சுகிட்டு இருந்தா.. அந்த புத்திசாலித்தனம் அதிகமா வேலை செய்யும் போலிருக்கு.
லைட்டெல்லாம் அணைச்சுட்டு செல்போன் கேமிராவை ஆன் பண்ணி செக் பண்றா. அப்பா பாக்கெட்டில் ஸ்பை கேமிரா. கேட்கணுமா... ஒரே கத்தல்.. சவுந்தர்யா இங்கே வாடி இதுதான் உன் லட்சணமா... ஏண்டி உன் புத்தி இப்படி போகுது.. தோத்துருவோம்னு பயத்துல என் அப்பாவை உன் பக்கம் இழுக்கிறியா...அப்பா பாக்கெட்டில் ஸ்பை கேமிரா வச்சுயா... வெட்கமா இல்லை. இதுக்கு தூக்கு போட்டுத் தொங்கலாமான்னு... யம்மாடி என்ன பேச்சு பேசிட்டா. அப்புறம் என்ன இந்த பிளானும் ஃபிளாப்! வேற என செய்யப் போறாங்களோ கண்ணனும், சவுண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”