ஜாதகத்த நம்பி கர்ப்பத்த சந்தேகப்படலாமா? கொஞ்சம் வெளிய வாங்க பாஸ்!

ராஜேஷின் அண்ணி ராஜேஷிடம் ஷாலினியைப் பற்றி ஏதேதோ பேசி, ராஜேஷ் ஷாலினியை வெறுக்கும்படி செய்து விடுகிறாள்.

ராஜேஷின் அண்ணி ராஜேஷிடம் ஷாலினியைப் பற்றி ஏதேதோ பேசி, ராஜேஷ் ஷாலினியை வெறுக்கும்படி செய்து விடுகிறாள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Minnale Serial Sun TV

Minnale Serial Sun TV

Minnale Serial on Sun TV : 'மின்னலே' தொடர் ராதிகா சரத்குமார் தயாரிப்பு நிறுவனமான ராடனின் சீரியல். இது மதியம் 1:30 மணி முதல் 2 மணி வரை திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ராதிகாவின் தங்கை நிரோஷா கமலா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சுமார் 2 வருடங்களுக்குப் பிறகு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மின்னலே சீரியலில் இருந்து விலகிக் கொண்டார். இவருக்கு பதிலாக கமலா கதாபாத்திரத்தில் இப்போது நடிகை யுவராணி நடித்து வருகிறார்.

ஏம்மா ஜானு கண்ணு தான் தெரியலை.. குரல் கூடவா கண்டுபிடிக்க முடியலை

Advertisment

யுவராணி ரடானின் சித்தி சீரியலில் நெகட்டிவ் கேரக்டர் செய்து அன்றைய நாட்களில் மக்களின் கோபத்துக்கு ஆளானவர். சித்திக்குப் பிறகு இப்போதுதான் ரடானின் மின்னலே சீரியலில் நடித்து வருகிறார். நிரோஷா கமலா என்றும், பைரவி என்றும் ரெட்டை வேடம் ஏற்று நடித்து இருந்தார். இப்போது யுவராணியும் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். நடிகை யுவஸ்ரீயும் கதாநாயகியின் மாமியாராக இந்த சீரியலில் நடித்து வருகிறார்.

மகன் ராஜேஷுக்கு ஜாதகம் பார்க்கறாங்க.. ஜாதகத்தில் அவனுக்கு 36 வயசில்தான் குழந்தை பிறக்கும் என்று ஜோதிடர் சொல்லிவிடுகிறார். ஆனால், மருமகள் ஷாலினி உடனடியாக கர்ப்பம் ஆகிவிடுகிறார். இந்த நேரத்தில் ஷாலினிக்கும், ராஜேஷுக்கும் மனக்கசப்பு வந்துருது. ராஜேஷின் அண்ணி ராஜேஷிடம் ஷாலினியைப் பற்றி ஏதேதோ பேசி, ராஜேஷ் ஷாலினியை வெறுக்கும்படி செய்து விடுகிறாள்.

Advertisment
Advertisements

டுவிட்டரில் அழைப்பு… உடனே சம்மதித்த விவேக்..! அது என்ன விஷயம் தெரியுமா?

மின்னலே சீரியல் முழுக்க தினம் தினம் ஷாலினியை கொல்ல, கதையில் வருகிறவர் போகிறவர் எல்லாம் சேர்ந்து கூட்டுத் திட்டம் போடறாங்க. ஒவ்வொரு சமயமும் இதில் இருந்து தப்பிச்சுகிட்டே இருக்கா ஷாலினி. ஷாலினியை மாமியார் யுவஸ்ரீ நம்பறாங்க. வீட்டுக்குள் சேர்த்துக்கறாங்க. ராஜேஷுக்கு பிடிக்காமல் வெளியில் வர, அவங்க அண்ணி ராஜேஷ்கிட்டே போய் மறுபடியும் வத்தி வைக்கப் பார்க்கறாங்க.

ராஜேஷ்.. உனக்கு நினைவு இருக்கா. அத்தை உனக்கு ஜோசியம் பார்த்தப்போ நீ 36 வயசில்தான் அப்பா ஆக முடியும்னு சொன்னரில்லை. ஆனால், இப்போ ஷாலினி கர்ப்பமா இருக்கா. ஷாலினி உன் பொண்டாட்டியா இருக்கலாம் ராஜேஷ். அவ வயித்துல குழந்தையும் இருக்கலாம்.. அவ அம்மாவாகவும் இருக்கலாம். ஆனால், அந்த குழந்தைக்கு நீ அப்பா இல்லை ராஜேஷ்.. கிரகங்கள் பொய் சொல்லாது என்று கொளுத்திப் போட்டுட்டு தன் பாட்டில் போயிட்டாங்க. இங்கு சந்தேகத் தீயில் கொதிக்கறான் ராஜேஷ்.

Sun Tv Tv Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: