Aranmanai Kili Serial : அரண்மனை கிளி சீரியல் விஜய் டிவியில் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. மீனாட்சி அம்மா பெரிய தொழில் அதிபர். மீனாட்சி அம்மாவா நடிகை பிரகதி நடிச்சு இருக்காங்க. இன்னும் இளமையாக இருக்கும் பிரகதி சினிமாவில் ஏன் நடிக்கவில்லை என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் அதிக மேக்கப் இல்லாமல் இயல்பான தோற்றத்துடன் அழகாக நடிக்கிறார்.
’அழகு’ல அளப்பரை பண்ற மல்லிகா யாருன்னு தெரிஞ்சா அசந்துடுவீங்க
கால் நடக்க முடியாத அர்ஜுனுக்காக மனைவி ஜானு மிகவும் கஷ்டப்பட்டு, என்னென்னமோ விரதம் எல்லாம் இருந்தார். வாசுகி பாம்பு அர்ஜுன் காலைத் தீண்டினால் அர்ஜுன் நடப்பான் என்று அப்போது கதை சொன்னார்கள். ஆனால், வாசுகி பாம்பு தீண்டியும் என்ன காரணத்தினாலோ அர்ஜூனால் நடக்க முடியவில்லை. திடீர்னு ஒரு நாள் சித்தர் கனவில் வந்து அர்ஜுன் உயிரை எடுத்துக்கப் போறேன்னு சொல்றார். ஜானு இப்போதும் விரதம் பூஜை என்று இருந்து புருஷன் உயிரை காப்பாத்திட்டா.
இதுக்கு நடுவுலதான் அர்ஜுன் காணாமல் போயிட்டான்னு மனம் உடைஞ்ச மீனாட்சி அம்மா, வீட்டை விட்டு வெளியில போயி... சாதாரண எளிமை வாழ்க்கை வாழ்ந்து.. மகன் அர்ஜுன் கிடைச்சவுடனே வீட்டுக்குப் போகலகலாம்னு முடிவு பண்றாங்க. அடுத்த வேளை சாப்பாட்டுக்கு உழைச்சு சாப்பிடணும்னு நினைக்கறாங்க. வயலில் இறங்கி நாற்று நட கத்துக்கறாங்க. ஒரு நாடோடி மாதிரி அவங்க வாழ்ந்துக்கிட்டு இருக்கையில், ஜானு அவங்களைத் தேடி வர்றா. மீனாட்சி அம்மா வசிக்கும் இடத்துக்கு வந்துட்ட அவளுக்கு பட்டாசு வெடிச்சு கண்ணில் காயம் ஏற்பட்டுப் போச்சு.
’அழகு’ல அளப்பரை பண்ற மல்லிகா யாருன்னு தெரிஞ்சா அசந்துடுவீங்க
அந்த நேரத்துல ஜானுவை காப்பாத்தி, ஆஸ்பத்திரி அழைச்சுட்டு போயி, வைத்தியம் பார்க்கறது மீனாட்சி அம்மாதான். ஜானுவின் கண்களில் கட்டு போட்டு வச்சு இருக்காங்க. மாமியார்கிட்டே தான் பேசறோம்னு தெரியாம எங்க மாமியார் தங்கமானவங்க.. என்ன காரணத்தாலோ அவங்களுக்கு என்னை பிடிக்கவே பிடிக்காதுன்னு சொல்றது... ஊருக்கே நல்லது பண்றவங்க என்னோட அத்தைன்னு சொல்றது... இவளோ பேசற ஜானுவுக்கு கண்ணுதான் தெரியலை.. மாமியார் குரல் கூடவா தெரியாது? என்ன கொடுமைடா சாமி!