Munaf Rahman Replaces Jai Dhanush : நடிகர் என்.முனாஃப் ரஹ்மான் என்கிற முன்னா, சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், ‘சந்திரலேகா’ சீரியலில் இணைந்துள்ளார். இதனால் மிகவும் உற்சாகமடைந்துள்ளார் முன்னா.
அடடா இத்தன நாள் இது தெரியாம போச்சே… வி.ஜே மணிமேகலை குக்கிங் டிப்ஸ்
முன்னணி ஆண் கதாபாத்திரமான சஞ்சய் பரந்தமனாக நடிக்கும் ஜெய் தனுஷுக்கு பதிலாக முன்னா அந்த சீரியலில் நடிக்கவிருக்கிறார். சஞ்சய்யாக அவர் நடிக்கும் எபிசோடுகள் லாக் டவுனுக்கு பின் ஒளிபரப்பப்படும்.
ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து சில படங்களை பகிர்ந்த முன்னா, “புதிய திட்டம் மற்றும் புதிய குழுவுடன் நீண்ட காலத்திற்குப் பிறகு படப்பிடிப்புக்குத் திரும்புகிறேன்.. எனது தமிழ் திட்டத்திற்காகக் காத்திருக்கும் தமிழ் குடும்பத்தினர் (ரசிகர்கள்) அனைவருக்கும்.. இதோ .. தினமும் மதியம் 2 மணிக்கு என்னைப் பாருங்கள் #சந்திரலேகா.. எப்போதும் போல உங்கள் ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் எதிர்பார்க்கிறேன்…” என்று இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார்.
சொன்னா நம்புங்க சரத் – ராதிகா செல்ல பையன் வளர்ந்துட்டாரு… பாப் சிங்கர் வேற!
முன்னா சந்திரலேகா தொடர் மூலம், தமிழில் அறிமுகமாகிறார். அருண் ராஜ் கதாபாத்திரத்தில் ‘ரோஜா’ தொடரின் மூலம் தெலுங்கில் அவர் அறிமுகமானார். ஆரம்ப நாட்களில் முன்னா மாடலாக இருந்தார். சந்திரலேகா சீரியலில் ஸ்வேதா பண்டேகர் சந்திரா சஞ்சய் என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”