Tamil Serial News: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘நீதானே எந்தன் பொன்வசந்தம்’. 40 வயது ஆணுக்கும், 20 வயது பெண்ணுக்கும் இடையேயான காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த சீரியலில், நடிகர் ஆகாஷ் ஹீரோவாக நடித்து வருகிறார். இதன் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமாகியிருக்கிறார் தர்ஷனா. அனு என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார்.
கல்லூரி நிகழ்ச்சியில் அனுவும், சூர்ய பிரகாஷும் சந்தித்துக் கொள்ள, பின்னர் தனது அலுவலகத்திலேயே அவளுக்கு வேலையும் கொடுக்கிறார். அங்கு ஏற்கனவே சூர்யாவின் உதவியாளராக வேலை பார்க்கும் மீராவிற்கு அனுவை வேலையில் சேர்த்தது பிடிக்கவில்லை. காரணம் மீராவிற்கு சூர்யபிரகாஷ் மீது ஒருதலைக் காதல்.
அனுவை வேலையில் இருந்து அனுப்ப பல சதி வேலைகளை செய்கிறார், சூர்யபிரகாஷின் மேனேஜரும் நண்பருமான பங்கஜ். மீராவின் வில்லத்தனத்திற்கும் உடந்தையாக இருக்கிறார். இவர்களின் சதி வேலைகளை தெரிந்து கொள்ளாத சூர்யபிரகாஷ், அனுவின் மீது கோபப்பட்டாலும் நாளடைவில் அவளை புரிந்து கொள்கிறார். இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கத் தொடங்குகின்றனர். அனு தன் காதலை சூர்யாவிடம் கூற அதை அவர் ஏற்க மறுக்கிறார். அதோடு அனுவை பெங்களூருக்கு இட மாற்றமும் செய்கிறார். ஆனால் ஒரு நாள் முழுக்க பார்க்காமல் இருந்தால், இதற்கு தான் சம்மதிப்பதாக சொல்கிறாள் அனு. இந்த சவாலில் தோற்றுப் போகும் சூர்ய பிரகாஷ், பின்பு அனுவிடம் தனது சம்மதத்தை சொல்லி விடுகிறார்.
அவர்கள் நெருக்கமாவதைக் கண்டு பங்கஜும், மீராவும் ஆத்திரமடைந்து, அவர்களை பிரிக்க திட்டமிடுகின்றனர். லண்டனில் நடக்கும் மீட்டீங்கிற்கு மீரா செல்வதாக இருந்தது, அது முடியாமல் போகவே சூர்யாவை அனுப்பி வைக்க திட்டமிடுகின்றனர். ஆனால் சூர்யா தனக்கும், அனுவிற்கும் சேர்த்து இரண்டு டிக்கெட் புக் செய்யுமாறு கூறுகிறார். அதைக் கேட்ட பங்கஜும், மீராவும் அதிர்ச்சியடைகின்றனர். அவர்கள் லண்டன் செல்வது தடைபடுமா அல்லது ஜாலி ட்ரிப்பாக போய் வருவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம். “அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”