நிலா சீரியல்: பழம்... பால் சொம்பு...! அடப் பாவி, அந்தக் கனவு இதுக்குத்தானா?
Nila Serial in Sun TV : சன் டிவியின் நிலா சீரியலில் நீலாம்பரியின் சதிகளை முறியடித்து, நிலாவுக்கும், கார்த்திக்குக்கும் ஒரு வழியா கல்யாணம் நடந்துருச்சு.
Nila Serial in Sun TV : சன் டிவியின் நிலா சீரியலில் நீலாம்பரியின் சதிகளை முறியடித்து, நிலாவுக்கும், கார்த்திக்குக்கும் ஒரு வழியா கல்யாணம் நடந்துருச்சு.
tamil serial news, nila serial sun tv, சீரியல் செய்திகள், தமிழ் சீரியல்
Sun TV Serial News: சன் டிவியின் நிலா சீரியலில் நிலாவுக்கும், கார்த்திக்குக்கும் ஒரு வழியா கல்யாணம் நடந்துருச்சு. ”நீலாம்பரி எனக்கு கல்யாணம் ஆகக் கூடாது... நான் தாம்பத்ய வாழ்க்கை அனுபவிக்கக் கூடாதுன்னு நினைக்கறா. அவளுக்கு எதிரா எனக்கும், கார்த்திக்குக்கு கல்யாணம் நடக்கும்.. நான் தாம்பத்ய வாழ்க்கை அனுபவிப்பேன்னு” அடிக்கடி சொல்லி சவால் விட்டுக்கிட்டு இருந்தா நிலா. என்னடா வயசுப் பொண்ணு வாயில இப்படியே டயலாக் வருதேன்னு கூட பலரும் எழுதினாங்க.
ஒரு வழியா வில்லி நீலாம்பரி நீ இனிமே எனக்கு எதிரி இல்லைடின்னு சொல்லி ஒதுங்கிட நிலாவுக்கும், கார்த்திக்குக்கு கல்யாணம் நடந்துருச்சு. அடுத்து என்ன.. கார்த்திக் ஆவலா எதிர்பார்த்துக் கொண்டு இருந்த முதலிரவுதான்... நிலாவை அம்மா முதலிரவுக்கு ரெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க.. முதலிரவு அறையை நிலாவின் அப்பாவும், மாமனாரும் தயார் செய்துக்கொண்டு இருக்காங்க.
அறைக்குள் போகிறாள் நிலா... கார்த்திக்கை எங்கு தேடியும் காணலை. எங்கே போயிருப்பான் கார்த்திக் என்று நிலா யோசித்தபடி நிற்க, பின்னால் வந்து நிலாவை கட்டிக்கறான் கார்த்திக். அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்னு நிலா கேட்க, இத்தனை நாள் கல்யாணம் ஆகட்டும்னு தட்டிக் கழிச்சுகிட்டே இருந்தே.. இனி நீ ஒன்னும் சொல்ல முடியாது நிலான்னு சொல்றான் கார்த்திக். நிறைய வேலை இருக்கு கார்த்திக்னு சொல்ல, என்ன வேலைன்னு கேட்கிறான் கார்த்திக்.
Advertisment
Advertisements
பால் குடிக்கணும், பழம் சாப்பிடணும்.. நிறைய பேசணும்னு சொல்றா. நிலா நாம காதலிக்கும்போதே நிறைய பேசியாச்சு என்று சொல்லி அவளைத் தூக்கிக்கறான் கார்த்திக். திடீர்னு நிலா நிலான்னு ஒரு குரல். பார்த்தா நடந்தது கனவு.. நிலா வெட்கத்தில் தலை குனிகிறாள். நம்ம ஆளுங்க காரணம் இல்லாம எதுக்கு சீனை வச்சு இருக்காங்க... அப்படி என்ன காரணமா இருக்கும்னு யோசிச்சால்...
அதே போல நிலா பால் சொம்பை எடுத்துக்கொண்டு அறையின் உள்ளே வருகிறாள். கார்த்திக் உட்கார்ந்து இருக்கான். நிலா பால் சாப்பிடறியா கார்த்திக்னு கேட்க..ம்ம் என்று சொல்கிறான். நிலா பாலை டம்பளரில் ஊற்றி கொடுக்கிறாள். அவன் குடிப்பதைப் பார்த்துக்கொண்டே அவன் தோளில் தலை சாய்த்த நிலா, இதுக்குத்தான் இத்தனை நாள் கஷ்டப்பட்டோம். இனிமேல் நாம் சேர்ந்து வாழ எந்த தடையும் இல்லைன்னு சொல்றா நிலா.
இப்போதான்.. நாம எதிர்பார்த்த அந்த சீன், இத்தனை நாள் துடிச்சுக்கிட்டு இருந்த கார்த்திக்.. நிலாவிடம் ஒரு முத்தம் வேணும்னு கெஞ்சின கார்த்திக், இன்னிக்கு சொல்றான்.. நிலா நாம் இன்னிக்கே வாழக்கையை ஆரம்பிக்கனுமா என்று. இப்போ புரியுதா.. நிலாவை அந்த கனவு ஏன் காண வச்சாங்கன்னு...! நிலாவாக சன் டிவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளினி பவித்ரா நடிச்சு இருக்காங்க. இந்த சீரியலில் அழகிய இளம் வில்லி நீலாம்பரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”