பாண்டவர் இல்லம் : போயும் போயும்... பொண்ணுங்க இந்த விஷயத்துல பொய் சொல்வாங்களா?

Sun TV Serial News: ரேவதி அந்த வீட்டுக்கு ராணி ஆகிவிடுவாள் என்று இந்த நாடகம் போடுகிறார்கள்.

Sun TV Serial News: ரேவதி அந்த வீட்டுக்கு ராணி ஆகிவிடுவாள் என்று இந்த நாடகம் போடுகிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pandavar Illam Serial, Sun TV (1)

Pandavar Illam Serial, Sun TV (1), தமிழ் சீரியல், சன் டிவி, tamil serial news

Tamil TV Serial Pandavar Illam : பாண்டவர் இல்லம் சீரியலில், நாயகி சீரியலில் கண்மணியாக நடிக்கும் பாப்ரிகோஷ் நாயகியாக நடிக்கிறார். பாண்டவர் இல்லத்தில் ஐந்து சகோதரர்கள் தாத்தாவின் வளர்ப்பில் ஒழுக்கமாக ஒற்றுமையாக வளர்க்கிறார்கள். இந்த ஒற்றுமையை கட்டிக் காக்க வேண்டும் என்று கயல், மல்லிகா இருவரும் மருமகளாக வருவதும், இவர்கள் ஒற்றுமையை குலைத்து இவர்களை பிரிக்க மருமகளாக ரேவதி வருவதும்தான் கதை.

’ஈரமான ரோஜாவே’ : மலரோட இந்த அவதாரம் எப்படி இருக்கு?

Advertisment

ஒற்றுமையா இருக்கும் அண்ணன் தம்பியை எதுக்கு பிரிக்கணும். இப்படித்தன கேள்வி வருது. இதுக்கு பழைய பகை என்று ஒரு தனி கதையை கொண்டு போறாங்க. ஒற்றுமையை குலைக்க ரேவதி ஒரு டிரிக் கையாள்வது ரொம்ப கொடுமையா இருக்கு. கயல், மல்லிகா இவங்களோட சேர்ந்து குழந்தை வரம் வேண்டி ரேவதியும் அம்மனுக்கு மாலை போட்டு விரதம் இருக்கிறாள்.

அப்போது மல்லிகாவின் அம்மா வந்து உனக்கு தான் கர்ப்பப் பையே இல்லையேடி? விரதம் இருந்தா மட்டும் குழந்தை பிறக்குமா என்று வேணும்னே கேட்கறாங்க. இதை கயலும் மல்லிகாவும் கேட்டுட்டு, ரேவதி அக்காவுக்கு கர்ப்ப பை இல்லைன்னு தாத்தா கிட்டே சொல்வாங்களாம். அப்போது இல்லையே எனக்கு கர்ப்ப பை இருக்குதுன்னு டாக்டர் சர்டிபிகேட் கொடுத்து நிரூபிப்பாங்களாம். இப்போ கயலும் மல்லிகாவும் சொல்ற பேச்சு எதுவும் தாத்தா மத்தியில் எடுபடாது. ரேவதி அந்த வீட்டுக்கு ராணி ஆகிவிடுவாள் என்று இந்த நாடகம் போடுகிறார்கள்.

என்ன ஒரு அறிவு? அதனால் தான் கேரளா டாப்…

Advertisment
Advertisements

ஏழை வீட்டு பெண் ரேவதி பாண்டவர் இல்லத்தை கெடுத்து, அவங்க வீட்டு பணத்தை அபகரிக்க இப்படி ஒரு திட்டம் போடுகிறாளாம். இப்படி எல்லாமா பெண்கள் பொய் சொல்வார்கள். என்று நினைக்கும்படி பாண்டவர் இல்லம் கதை போகிறது. எல்லாருக்கும் இந்த சந்தேகம் வருமா. இல்லை இப்படியும் நாட்டில் நடக்குதா?

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tv Serial Sun Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: