Pandian Stores Serial: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் படு பிரபலம். குறிப்பாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலுக்கு ரசிகர்கள் ஏராளம். மூர்த்தி – தனம், ஜீவா – மீனா, கதிர் – முல்லை என மூன்று ஜோடிகள். இவர்களுக்குள் இருக்கும் பரஸ்பர அன்பு பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.
விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்க முதல்வர் உத்தரவு
ஜீவாவுக்கு தனது மாமா மகள் முல்லையுடன் திருமணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால் ஜீவாவோ முதலாளி பெண் மீனாவை காதலிக்கிறான். இதனால் அவனது தம்பி கதிரை, திருமணம் செய்துக் கொள்கிறாள் முல்லை. முதலில் இருவருக்கும் பிடிக்காமல் இருந்தாலும், போகப் போக புரிதல் உண்டாகிறது. தற்போது ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ள சீரியல் ஜோடிகளாக கதிரும், முல்லையும் மாறியிருக்கிறார்கள். இவர்களின் ரொமான்ஸ் ரசிகர்களுக்கு பிடித்தமான ஒன்று. சராசரி கணவன் மனைவியாக, திருமணத்துக்கு பிறகான காதலை நேர்த்தியாக வெளிப்படுத்துவதில் இந்த ஜோடி ரசிகர்களின் ஃபேவரிட்டாக மாறியிருக்கிறது.
ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு அடித்தது லக்.. வட்டி எவ்வளவு தெரியுமா?
தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், ”நீ இந்த வீட்டுக்கு வந்த பிறகு தான், வீட்லயும் சரி இல்ல எனக்கும் சரி எவ்வளவோ நல்லது நடந்திருக்கு. காட்டான் மாதிரி சுத்திட்டு இருந்தேன். இன்னைக்கு மனுசன் மாதிரி ஆகியிருக்கேன்னா, அது உன்னால தான். வெளிய போய்ட்டு வீட்டுக்கு வரும்போதே, உன்ன நெனச்சு சந்தோஷம். இதுக்கெல்லாம் நான் என்ன கொடுத்திட முடியும் சொல்லு. எனக்கு மட்டுமில்ல, இந்த வீட்ல எல்லாருக்குமான ஆள நீ இருக்க. எல்லாருக்குமே உன்ன பிடிக்குது. எல்லாரையும் பாசமா பாத்துக்கற. உனக்காக எவ்வளவோ செய்யலாம், என்ன செய்றதுன்னு தான் தெரில. தயவுசெஞ்சு பணத்த நெனச்சு வருத்தப்படாத. உங்க அம்மாக்கிட்ட பேசாம இருந்திருக்கலாம். பழைய பிரச்னையால தள்ளி நின்னுருக்கலாம். ஆனா நீ எனக்கு முக்கியம். ரொம்ப ரொம்ப முக்கியம்” என முல்லையிடம் கூறுகிறான் கதிர்.
இந்த ப்ரோமோவை பார்க்கும் அனைவருக்குமே மனம் லேசாகும் என்பதில் சந்தேகமில்லை.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”