Saravanan Meenatchi Rachitha Mahalakshmi : விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சினிமாவில் தான் முதல் பாகம், இரண்டாம் பாகம் என்று பார்த்திருப்போம். ஆனால், சீரியலில் பல பாகங்களை கண்ட சீரியல் என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பான என்றால் மீனாட்சி சீரியல் தான்.
,
சிம்ரன் இப்போவும் ஹீரோயின் தான்… இந்த டான்ஸ் வீடியோ பாத்தா புரியும்…
சீரியலில் எத்தனையோ சரவணன் கதாபாத்திரம் மாறினாலும் இறுதி வரை, ரச்சிதா மட்டுமே மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த சீரியலில் கிடைத்த புகழால் அவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது. இதுவரை இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார் ரச்சிதா. தமிழில் 2015 ஆம் ஆண்டு ராதாமோகன் இயக்கத்தில் கருணாகரன் நடிப்பில் வெளியான ‘உப்பு கருவாடு’ படத்திலும், அதே ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘பாரிஜாதா’ என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
பெங்களூரில் பிறந்து வளர்ந்த ரச்சிதா, படிப்போடு சேர்த்து மறுபுறம் மாடலிங்கும் செய்துக் கொண்டிருந்தார். கன்னட சேனலான ஸ்டார் சுவர்ணாவில் ஒளிபரப்பான, ’மேக மந்தரன்’ என்ற சீரியல் தான் அவருக்கு முதல் தொடர். தொடர்ந்து 5 கன்னட சீரியல், 2 தெலுங்கு சீரியல்களில் நடித்து விட்டு, 2011-ல் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார்.
,
அந்த சீரியலில் தன்னுடன் ஜோடியாக நடித்த, ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். பிரிவோம் சந்திப்போம் 2, சரவணன் மீனாட்சி 2, 3, இளவரசி, மசாலா குடும்பம் உள்ளிட்ட தமிழ் சீரியல்களில் நடித்திருக்கும் ரச்சிதா, தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘நாச்சியார்புரம்’ சீரியலில் நடித்து வருகிறார். இதில் ரச்சிதாவின் கணவர் தினேஷ் தான் ஹீரோ. அதோடு ஜீ தமிழில் ஒளிபரப்பான, ஜூனியர் சீனியர், ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 3.0 ஆகிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஜட்ஜாகவும் இடம்பெற்றிருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சரளமாக பேசக் கூடியவர் ரச்சிதா.
வைரஸ் ஒருபுறம்! பாழாய் போன வெட்டுக்கிளிகள் மறுபுறம் ; மீண்டெழுமா இந்தியா?
,
ஷூட்டிங் இல்லாத நாட்களில் ரச்சிதாவும், அவரது கணவர் தினேஷும் ட்ரிப் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்களாம். பிஸ்கெட் மீது அலாதி பிரியம் வைத்திருக்கும் ரச்சிதா, புதுப்புது பிஸ்கெட்டுகளை டேஸ்ட் செய்வாராம். டிஸ்யூ பேப்பர் இல்லாமல் அவரால் இருக்கவே முடியாதாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”