Tamil Serial News: சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களிலேயே ரசிகர்களைக் கவர்ந்த ஜோடிகள் என ‘ரோஜா’ சீரியல் ரோஜா அர்ஜூனை சொல்லலாம்.
புயல் எதிரொலி… காய்கறி விலை எப்படி ஏறி போச்சு பாருங்க!
ஒப்பந்த திருமணம் செய்து கொண்ட ரோஜாவும், அர்ஜுனும் காதலில் லயித்து, தற்போது ஆதர்ச தம்பதிகளாக இணைந்து வாழ்கின்றனர். இவர்களின் ரொமான்ஸை பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் உள்ளது. இவர்களை பிரித்து, அர்ஜூனை தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என வில்லத்தனமான பிளான்களை போட்டு வரும் அனுவிற்கு தொடர்ந்து ஏமாற்றம் தான். ஆனாலும் தனது வில்லத் தனத்திலிருந்து பின் வாங்காமல், புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் அனு.
எத்தனை முறை மூக்குடைபட்டாலும் திருந்தாத அனு, அர்ஜுனை கொலை செய்ய பரிசு பெட்டியில் வெடிகுண்டை வைத்து விடுகிறாள். அதைத் தெரிந்துக் கொண்ட அர்ஜுன், அனுவிடம் பரிசை கொடுத்து அவளையே திறக்க சொல்கிறான். வெடிகுண்டு இருக்கிறது என தெரிந்து பதறிய அனு, அதை பயத்திலேயே திறக்கிறாள். ஆனால் விபரீதமாக எதுவும் நடக்கவில்லை. பின்னர் அனு அங்கிருந்து கிளம்பும் போது அர்ஜுன் அவளுடைய ஆடையை மிதித்து கீழே விழச் செய்கிறான். இதனால் அவளுக்கு காலில் அடிபட்டு விட, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள் குடும்பத்தினர்.
இந்நிலையில் செண்பகத்துக்கு தலையில் அடிபட்டுவிட, அனு இருக்கும் அதே மருத்துவமனையில் செண்பகத்தை சேர்க்கிறார் அவரை காரில் மோதிய மாணிக்கத்தின் உதவியளார். ரோஜாவுக்கு அவரை பார்த்ததும் தனது அம்மாவின் தாலாட்டும், பழைய ஞாபகங்களும் வருகிறது. ஆனால் அது செண்பகம் என ரோஜாவுக்கும், குடும்பத்தினருக்கும் தெரியாது.
சிகிச்சைக்காக செண்பகத்துக்கு அவசரமாக ரத்தம் தேவை பட, ரோஜா அவருக்கு ரத்தம் கொடுத்து உதவுகிறாள். அதே நேரத்தில் செண்பகத்தின் உயிரை காப்பாற்ற வேண்டுமானால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அதற்கு சொந்த பந்தங்களின் அனுமதி வேண்டும் என்கிறார்கள். அப்போது ரோஜாவோ, செண்பகம் தான் தனது தாய் என தெரியாமலேயே, ஒரு உயிரின் அருமையை உணர்ந்து பிள்ளை ஸ்தானத்தில் கையெழுத்து போடுகிறேன் என கூற, அதற்கு அர்ஜுனின் பாட்டி ஒத்துக்கொள்ளவில்லை.
செல்லப் பிராணிகளுடன் சினிமா நட்சத்திரங்கள்!
இதனால் ஒரு உயிரின் மதிப்பு உங்களுக்கு தெரிவில்லை என பாட்டியிடம் சண்டை போடுகிறாள் ரோஜா. பாட்டியோ செண்பகம் இறந்து போனதாக நினைத்து தன் மகளுக்கு நடந்த கதையை கூறி அழுகிறார். அப்போது ரோஜா உங்களுடைய மகள் உயிரோடு தான் இருப்பார் என அவருக்கு நம்பிக்கை தருகிறாள். அதோடு உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் பாட்டி என்று கூறி, கையெழுத்துப் போட பாட்டியிடம் அனுமதி வாங்குகிறாள்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”