Advertisment

’கறுப்பு நெகட்டிவ் இல்ல’: தடைகளை தகர்த்தெறிந்த ரோஷினி!

நிறத்தால் மற்றவர்களுக்கு என்னை பிடிக்காமல் இருக்குமோ? என்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்களோ? என்ற பயம் என்னுள் இருந்தது.

author-image
WebDesk
New Update
Vijay TV Bharathi Kannamma Roshini Haripriyan

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி ஹரிப்ரியன்.

Roshini Haripriyan: சினிமாவில் இருந்து சீரியலில் சின்ன கதாபாத்திரம் வரைக்கும் நடிகைகளைப் பொறுத்தவரைக்கும், ’வெள்ளை தோல்’ தான் முக்கியத்துவம் பெறும். அதையும் மீறி டஸ்க்கி ஸ்கின் டோனில் ஒரு பெண் கதாபாத்திரம் இருந்தால், அது நிச்சயம் வில்லியாகத் தான் இருக்கும். பாஸிட்டிவ் அல்லது கதையின் ஹீரோயினாக டஸ்க்கி ஸ்கின் டோன் பெண்ணுக்கு வாய்ப்பு கிடைப்பதெல்லம் மிக அபூர்வம். அதில் ஒருவர் தான், விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில், கண்ணம்மாவாக நடித்து வரும் ரோஷினி ஹரிப்ரியன்.

Advertisment

’கூகுள் மேப் கூட ஜனனி வீட்ட காட்டுதே’: இது என்னடா புது சோதனை…

சென்னையில் பிறந்து வளர்ந்த ரோஷினி, சென்னை செயின்ட் மேரீஸ் பெண்கள் பள்ளியில் பள்ளி படிப்பையும், எத்திராஜ் கல்லூரியில் இளங்கலை பட்டமும் பெற்றவர். கல்லூரி முடித்ததும், ஐடி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த ரோஷினி, அங்கு இரண்டு வருடம் வேலை செய்திருக்கிறார். பின்னர் வேலையை விட்டு விட்டு மாடலிங் துறைக்குள் புகுந்திருக்கிறார்.

,

சின்ன வயதில் இருந்தே மாடலிங் பண்ணனும் என்கிற ஆசை இருந்தாலும், மாநிறத்தில் இருப்பதால், சிவப்பாக இருப்பவர்களால் மட்டும் தான் இதெல்லாம் செய்ய முடியும் என, நினைத்து அதற்கான முயற்சிகளை எடுக்காமல் விட்டு விட்டாராம் ரோஷினி. பின்னர் ஸ்கின் டோன் நன்றாக இருப்பதாகக் கூறி, வாய்ப்புகள் வந்ததாம்.

இது குறித்து ஒரு பேட்டியில், “நான் சின்ன வயதிலிருந்து என்னுடைய வாழ்க்கையில் இந்த நிறத்தால் நிறைய பிரச்னைகளை சந்திக்கிறேன். இப்போது வரைக்கும் தொடர்கிறது. இதற்கு முன் எனக்கு மாடலிங் பண்ண நிறைய வாய்ப்புகள் வரும். அது எல்லாமே என்னுடைய கலர் மூலம் தான். மற்றவர்களிடம் இருந்து என்னை தனியாக உருவாக்கியதே என்னுடைய நிறம் தான். ரோஷினினா இவங்க தான் என்று எனக்கு அடையாளத்தை தந்ததே என் நிறம் தான். நிறைய விஷயங்களில் என்னுடைய நிறம் எனக்கு பிளஸ் ஆக அமைந்தது. என்னுடைய நிறம் நெகட்டிவாக இருந்ததில்லை. ஒரு முறை விளம்பரங்களில் நடிக்க சொன்ன போது அங்கு உள்ளவர்கள் பாம்பே மாடலிங் இருந்தால் நல்ல இருக்கும், இவங்க எல்லாம் வேணாம் என்று சொன்னார்கள்.

எனக்குள்ளேயே என்னுடைய நிறம் குறித்து பயங்கரமான காம்ப்ளக்ஸ் தான். என்னுடைய நிறத்தால் நான் முதலில் பயங்கர கஷ்டப்பட்டு இருக்கிறேன். எல்லா விதத்திலும் நான் தனித்து இருக்கிறேன். நிறத்தால் மற்றவர்களுக்கு என்னை பிடிக்காமல் இருக்குமோ? என்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்களோ? என்ற பயம் என்னுள் இருந்தது. இப்ப கூட எனக்குள் இருக்கிறது. ஆனால், யாரும் நீங்களே உங்களை தாழ்த்தி கொள்ளாதீர்கள். உங்களை தாழ்த்துவதற்கு உங்களை சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள். அதனால் நீங்கள் உங்களைத் தாழ்த்தி கொள்ளாதீர்கள். முதலில் உங்களை நீங்கள் லவ் பண்ணுங்க. மனதார நீங்கள் தான் அழகு என்று நம்புங்கள்” எனக் கூறினார்.

,

சுஷாந்த் வங்கிக் கணக்கில் இருந்து ‘யாருக்கோ’ சென்ற ரூ.15 கோடி – சிக்கலில் காதலி

இருப்பினும் நிறம் பற்றிய புரிதலை ஏற்படுத்திக் கொண்டு கடினமாக உழைத்திருக்கிறார் ரோஷினி. அர்ச்சனா ஆர்த்தி இயக்கிய “ஸ்கார்ஸ் ஆஃப் சொசைட்டி” என்ற தமிழ் குறும்படத்தில் ரோஷினி அறிமுகமானார்.மனம் டெக்ஸ்டைல், மேத்தா ஜூவல்லரி மற்றும் அனந்தம் சில்க்ஸ் போன்ற சில பிரபலமான விளம்பரங்களில் அவர் தோன்றியுள்ளார். மாநிறமாக இருக்கும் பெண்ணை மையமாக வைத்து, சீரியல் எடுப்பதாகக் கூறி ரோஷினியை அணுகினார்களாம். அவரும் ஓகே சொல்லிவிட்டாராம்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Vijay Tv Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment