Sushant Singh Rajput: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தை பணமோசடி கண்ணோட்டத்தில் விசாரிக்க முடியுமா என்று அமலாக்க இயக்குநரகம் (இ.டி) ஆய்வு செய்து வருகிறது.
இந்த விவகாரத்தில் தனது எஃப்.ஐ.ஆரைப் பகிர்ந்து கொள்ளுமாறு அமலாக்கத்துறை பீகார் போலீசாருக்கு கடிதம் எழுதியுள்ளது. அதைப் படித்த பிறகு, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ) கீழ் இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றதா என்று அறியப்படும்.
ராமர் கோயில் பூமிபூஜை குழுவில் உள்ள தீட்சிதர், பணியிலிருக்கும் 16 காவலர்களுக்கு கொரோனா!
ஜூலை 25 ம் தேதி பாட்னா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில், சுஷாந்தின் தந்தை கே கே சிங் நடிகர் ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது மரணத்திற்கு ஐந்து பேர் மீது குற்றம் சாட்டியுள்ளார். ரியாவும் மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களும் சுஷாந்தின் பணத்தை பறித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
34 வயதான சுஷாந்த், ஜூன் 14 அன்று மும்பை புறநகர்ப் பகுதியான பாந்த்ராவில் உள்ள அவரது குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
எஃப்.ஐ.ஆரில், ஒரு வருடத்தில் சுஷாந்த்துக்கு யாரென்றே நபர்களின் வங்கிக் கணக்குகளுக்கு, ரூ .15 கோடி சுஷாந்தின் கணக்கிலிருந்து பறிக்கப்பட்டிருப்பதாக சிங் குற்றம் சாட்டியுள்ளார். ரியா தனது வீட்டில் சுஷாந்திற்கு அதிகப்படியான மருந்தைக் கொடுத்ததாகவும், “சுஷாந்த் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொய் சொன்னார்” என்றும் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால், சுஷாந்தின் சொத்துக்கள் சட்டவிரோதமாக பறிக்கப்பட்டதா என்பதை ED ஆராயும் என்று தகவல்கள் தெரிவித்தன.
ஐபிசி பிரிவு 306 (தற்கொலைக்கு உதவுதல்), 341, 342 380, 406 (நம்பிக்கையை மீறுவது) மற்றும் 420 (மோசடி) ஆகியவற்றின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில், மோசடி குற்றம் PMLA பிரிவின் (பணமோசடி தடுப்பு சட்டம்) கீழ் வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil